கர்வம் பேரழகு ----முஹம்மத் ஸர்பான்

ஆறடி நீளமான
கவிதை
புத்தகத்தை
உள்ளங்கை
அளவான
இதயத்தைக்
கொடுத்து
வாங்குகிறேன்

ஹைக்கூவின்
கருவறை
அவள் விழிகள்

அவளது
விழிகளின்
அழகில்
சரிந்து
விழுந்த
என்னை
நான்
மறந்து
போனேன்

விழியெனும்
வாளினால்
நான் வளர்த்த
ரோஜாப்
பூந்தோட்டத்தை
பயமுறுத்தி
தற்கொலைக்கு
தூண்டுகிறாய்

நாளும்
நான்
எழுதுவது
கவிதை
அல்ல
அவளது
அழகின்
ரகசியம்

ஆகவே!

கவிஞனின்
காதலிக்கு
அதீத கர்வம்
தான் பேரழகு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (23-May-17, 7:19 pm)
பார்வை : 197

மேலே