பாழடைந்த மனதின் முகப்பு

பாழடைந்த மனதின் முகப்பு...
*******************************************

திசைகளை உடைத்து விட்டு
எப்படியும் வந்து விடுகிறது...
சண்டையிட்டோ மண்டியிட்டோ
தன் சாளரம் காத்துக்
கொள்கிறது...
வேகமாய் வந்து வீழும்
எரிகல்லை போல
அது தாண்டியும்
கூட்டுக்குள் அதே சூட்டை
சேமித்துக் கொள்கிறது...
தட்டியதும் திறக்கையில்
வயிறு கிழித்து ரத்தம்
சிந்த வைக்கும்
ஆக்கிரமிப்பைக் கடந்ததாகவே
நினைக்கிறது...
மாய சக்கரம் எத்தனை
சுழன்றும் மாற்று யோசனையை
அப்போதைய முகப்பில்
மாட்டி விடுகிறது...
நான்கு புறமும் பறித்துக்
கொண்ட பிறகும்
எட்டாய் எட்டிப் பார்க்கிறது...
இன்னும் சுருங்கினாலும்
புள்ளி தாண்டியும்
சூனியம் இருக்கும்
எந்த போரோ எந்த வஞ்சமோ
தன்னை எப்படியும் காத்துக்
கொள்கிறது
பாழடைந்த பிறகும்
மூச்சு வீட்டுக் கொண்டிருக்கும்
கைவிடப் பட்ட
ஒற்றை வீடு...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-May-17, 9:10 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 104

மேலே