எப்பொழுதும் எங்கடா

டேய் நண்பா முருகையா, எப்பொழுதும் எங்கடா?
😊😊😊😊😊
வாடா அமுதா. வா, வா. இங்க வந்து உக்காருடா.
😊😊😊😊
எப்பொழுதும் எங்கடா?
😊😊😊😊😊😊
மொதல்ல உக்காருடா.
😊😊😊😊😊
எப்பொழுதும் எங்கடா?
😊😊😊😊😊😊
என்னடா வந்ததிலிருந்து 'எப்பொழுதும் எங்கடா, எப்பொழுதும் எங்கடா' -ன்னு கேட்டு எனக்கு எரிச்சலூட்டிட்டு இருக்கற? நீ என்ன கேக்கறன்னு புரிலடா. எம் பதில் இப்பொழுது இங்க இல்லடா.
😊😊😊😊
ஏண்டா பொய் சொல்லற? நான் இங்க வர்றபோதுதான் அவள் சத்தம் போட்டுச் சிரிச்சது எங் காதில விழுந்துச்சு.
😊😊😊😊😊
எவடா?
😊😊😊😊😊
'எப்பொழுதும்'-தாண்டா.
😊😊😊😊😊😊
என்னடா மடத்தனமா திரும்பத் திரும்ப 'எப்பொழுதும்'னு சொல்லற
'அவ'-ன்னும் சொல்லற?
😊😊😊😊😊
உம் பொண்ணத்தாண்டா கேட்டேன்.
😊😊😊😊😊
இல்லையே 'எப்பொழுதும் எங்கடா'-ன்னுதாண்டா கேட்ட.
😊😊😊😊
ஆமாம். கேட்டேன். உம் பொண்ணு.பேரு என்ன?
😊😊😊😊😊
அவளோட பெயர் சூட்டு விழாவுக்கு முக்கிய விருந்தாளியே நீதாண்டா. எங்க வீட்டு அடிக்கடி வர்ற என்னோட உயிர்த் தோழனான உனக்கு எம் பொண்ணோட பேருகூட மறந்து போச்சா?
😊😊😊😊
மறக்கலடா. உம் வாயால ஒரு தடவ அந்தப் பேரச் சொல்லுடா.
😊😊😊😊😊😊
சதா (Sada)*
😊😊😊😊😊
தமிழ்ப் பேரு வைடான்னு நாஞ் சொன்னன். நீ தான் "இந்திப் பேரத்தான் வைப்பேன்"னு அடம் பிடிச்ச. இப்ப அவுளுக்கு வயசு பத்து ஆகுது. அவ பேருக்கு என்ன அர்த்தம்?
😊😊😊😊😊
பெத்தவங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேருங்கள கொழந்தைங்களுக்கு வைக்கறதுதாண்டா தற்போதைய தமிழர்களோட நாகரீகம். நான் எங்க பொண்ணுக்கு சதா -ன்னு பேரு வச்சதில என்ன தப்பக் கண்டுபிடிச்ச?
😊😊😊😊😊
உங்க பாப்பாவோட பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லுடா நண்பா.
😊😊😊😊
பொழப்புக் கெட்டு அர்த்தம் தெரிஞ்சு பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறவங்க நூத்துக்கு இருபது தமிழர்கள் தாண்டா இருப்பாங்க. நான் அந்தப் பட்டியல்ல இல்ல. அர்த்தத்தைப் பத்தியும் நாங் கவலப்படலடா நண்பா.
😊😊😊😊😊
சரி. நாஞ் சொன்னா நீ நம்பமாட்ட. நம்ம பக்கத்துத் தெருவில இந்தி ஆசிரியர் அருளப்பரைக் கேட்டுப்பாரு அவுரு சொல்லுவாரு. சரி. நா வர்றண்டா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

* always

எழுதியவர் : மலர் (24-May-17, 12:14 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 251

மேலே