சிறுபஞ்சமூலம்

உடையிட்டார் புன்மேய்வா ரோடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேது மின்றி-நடையிட்டார்
ரிவ்வகை யைவரையு மென்று மணுகாரே
செல்வகைச் சேவகர் சென்று. 40

1.உடுக்க ஆடை நெய்து கொடுத்தவர்
2.வீட்டுக்குக் கூரை மேய்பவர்
3.நீரில் ஆற்றைக் கடக்க உதவியவர்
4.படைக்கலம் வடித்துத் தந்தவர்
5.எந்தப் பற்றும் இல்லாமல் காட்டில் நடைவழி உண்டாக்கித் தந்தவர்

ஆகிய ஐவரையும்
அரசனின் செல்வாக்குள்ள சேவகர்
தண்டிப்பதற்காகச் சென்று அணுக மாட்டார்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

எழுதியவர் : (24-May-17, 7:54 am)
பார்வை : 98

மேலே