உணவில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டால் உடல் எடை குறையாது அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வு தகவல்

உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வு மூலம் அறிவித்துள்ளனர்.

உணவு குறைவாக உட்கொள்ளும் போது எடையை எரிப்பதற்கான சமிக்ஞை மூளை வெளியிடாது என்பதால், உணவு கட்டுப்பாட்டின் மூலம் எடை குறைப்பு சாத்தியப்படாது என்று அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் எடை என்பது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சமீபத்தில் அதிகரித்துள்ள மிக முக்கிய தனி மனித பிரச்சினைகளில் ஒன்றாகும். உடல் எடையை குறைப்பதற்கென்று பல்வேறு உணவு கட்டுப்பாடு முறைகள் கையாளப்படுகின்றன. ஆனால் இது போன்ற உணவு கட்டுப்பாடு முறைகள் எதுவும் எடையை குறைப்பதற்கு உதவாது என அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மனித உடலில் உள்ள நியூரான்கள் தான் உணவு உண்ணும் பழக்கத்தை தூண்டக்கூடியவை. அப்படி தூண்டப்படும் போது உணவு உடலில் சேர்ந்து எரிந்து ரத்தத்தில் கலப்பதற்கான பணியும் இணைந்தே நடக்கும். ஆனால் உணவு மிக குறைவாக எடுத்துக் கொள்ளப்படும் போது மூளையில் உள்ள நியூரான்கள் எரிப்பு வேளையை நிறுத்தி உடலுக்கு தேவையான சத்தை தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குச் சென்று விடும் என்று அந்த ஆய்வு முடிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உணவு கட்டுப்பாட்டிற்கு பதிலாக உடற்பயிற்சி, சீரான இடைவேளையில் உணவு உண்பது போன்றவை மட்டுமே எடையைக் குறைக்க உதவும் என்று மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நன்றி தமிழ் ஹிந்து

எழுதியவர் : (24-May-17, 9:03 am)
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே