அழகின் எந்திரம் இவள் கவிதை தேசத்து மந்திரம்

வண்ணப் பூந்தோட்டம் இவள்
வனப்பு நீரோட்டம்
வள்ளுவன் தோட்ட முன்றில்
வசிக்கும் வசீகர அன்றில்
கன்று போல் தோன்றும் விடலை
கம்பன் மயங்கினான் கண்டு இவள் உடலை
ஒன்று ஆனதினால் இவள் ஒருமை
ஒய்யார அழகில் இவள் பன்மை
இளங்கோ கட்டினான் இவளுக்கு இடுப்பு நாடா
அவன் மென்று துப்பிய இவள் கவிதைப் பீடா
அழகை முகர வந்த வாசன்
இவள் இல்லத்து நிரந்தர வாசன் கண்ணதாசன்
வைர முத்து கண்ட வைரம்
இவள் நிகரில்லா கோஹினூர் வைரம்
அனைவரையும் மயக்கும் தந்திரம் இவள்
வாலி சொன்ன வார்த்தை மந்திரம்
இக்பால் பிழிந்த கவிப் பால்
இம்ரஉல் கைஸ் சொக்கிய காமத்துப் பால்
கற்பனை உலகில் எதுவுமில்லை இவளுக்கப்பால்
குல்சார் நெய்த சுடிதார் அணிந்து நின்றாள்
அதனைக் கண்டு மயங்கினார் ஜாவித் அக்தார்
கவிதை தேசத்து தலைமை
மந்திரவாதி ஷேக்ஸ்பியர்
சொன்ன அழகு ஆருடம்
இவள் தலையில் சூட்டினான்
முத்துக் குமார் கிரீடம்
மந்திரக் குவளை மனது தேடுது அவளை
மேதினியில் காணவில்லை
இவள் போல் அழகை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-May-17, 2:49 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 159

மேலே