சுமந்து

அடியே மருதாணி, மொட்டக்கண்ணி, நாம் பாட்டுக்கு அரிசி ஆலைல மூட்டை தூக்கிப் பொழச்சிட்டு நிம்மதியா இருந்தேன். உங்கப்பங்காரன், என்ற தாய் மாமன், உம் மொகராசிக்கு உன்னக் கட்டிக்க எவனும் வந்து பொண்ணு கேக்காம வயசாகிக் கெடக்கறயேன்னு என்ற தலைல பிடிச்சு உன்னக் கட்டி வச்சுட்டாண்டி.
😊😊😊😊😊
யோ மூட்ட தூக்கி முத்தையா எனக்கென்ன கொறச்சல்?
😊😊😊😊😊
ஏண்டி நா ஆலைலதான் கசட்டப்பட்டு நெல்லு மூட்ட, அரிசி மூட்டையெல்லாம் தூக்கி களச்சுப் போயி வீட்டுக்கு வர்றேன். வீட்டுலயும் எல்லா வேலையையும் என்னயே செய்யச் சொல்லற. கடைத்தெருவுக்குப் போயிட்டு வர்ற போதும் நீ கைய வீசிட்டே வர்ற. நாந்தான் மூட்டை முடிச்செல்லாம் தூக்கிட்டு வர்றேன். எவனோ எண் கணித சோசியகாரன் சொன்னானம் எனக்கு 'சுமந்த்' -ன்னு பேரு வச்சா லட்சாதிபாதியா வாழ்வேன்னு சொன்னானாம். நா என்னத்தக் கண்டன். எங்க போனாலும் மூட்டை முடிச்ச சுமந்து சமுந்தே நா சுமந்தாகிட்டண்டி மொட்டக் கண்ணி மருதாணி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Sumant = wise, friendly

எழுதியவர் : மலர் (24-May-17, 5:22 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 266

மேலே