ஒரு புன்முறுவல் போதும்

அள்ளித் தெறித்த கோலம் போல்
என் முகத்தில் கோபத்தை அப்படியே
கொப்பளித்து விட்டுச் செல்கிறாய்
சாய்ந்து கிடக்கிறது என்னிதயம்
முட்டுக் கொடுத்தும் நிமிராமல்

நீ சிரிப்போடு விடை பெற்றால்
பெய்யும் பூமாரி
சிறு முத்தம் தந்தால் அன்று
எனக்கு சோனாவாரி
இன்று அமிலமல்லவா
மழையாகப் பொழிந்தது

உன் வரவுக்காக காத்திருக்கிறேன்
இங்கு வறண்டு போன இதயமாய்
நீ புன்முறுவல் பூத்தால் போதும்
அமில மழையும் அமிர்தமாகும்
வறண்ட நிலமும் பசுமையாகும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (25-May-17, 10:55 am)
பார்வை : 164

மேலே