செவெந்தி

என் மாமன் என் முகத்த பாத்து பிடிக்கலனு சொல்லிட்டாருடி நான் நாவப்பழம் கலர்னு சொல்லி கிண்டல் பன்னராரு என்று செவெந்தி தன் தோழி நந்தினியிடம் கூறினாள். அதுக்கெல்லாம் நீ கவலை படதடீ
கல்யாணத்துக்கு பெரியவங்க சம்மதிக்க வைப்பாங்க கல்யாணம் முடிஞ்ச எல்லாம் சரியா போய்டும் என்றாள் நந்தினி.
செவந்தி கிராமத்து பொண்ணா இருந்தாலும் அவள் பி.டெக் இஞ்சினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள்.
இணையதளத்திலும் வேலைக்கு அப்பளை செய்தாள்.
கிராமத்து பெண் என்பதால் அடக்கமாக வாழ்ந்தாள் .சொந்தத்தில் பெரியவர்கள் முயற்ச்சிக்க திருமண பேச்சுவார்த்தையில் இவள் மாமன் கலர் பற்றி பேச மனமுடைந்தாள்.
சிலநாட்களுக்கு பிறகு தீடிரென்று அவளுடைய மாமனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது இவளுக்கோ தாங்கமுடியாத மகிழ்ச்சி.சொல்லுங்க மாமா எப்படி இருக்கீங்க?
வேலையெல்லாம் எப்படி போகிறது என்றாள்?.
பராவாயில்லை என்றான் சேரன்!
அப்புறம் என்றாள்..
அப்புறம்னா ?.
மாமா நான் வெட்கத்த விட்டு சொல்றேன் "ஐ லவ் யூ" என்றாள் செவ்வெந்தி.
மாமா ப்ளீஸ் என்றாள்!
அதற்க்கு கருப்பி சோடா புட்டி உனக்கு நான் வேணுமா என சும்மா உன்னை கிண்டல் பன்னத்தான் போன் பன்னன் அப்படினு சொல்லி
"சேரன் எதுவும் கூறாமல் போனை வைத்தான்"..
செவ்வந்தியோ மாமாவுக்கு பிடிக்கலையே என்றும் பவர் கண்ணாடியுடன் தன் அழகை கண்ணாடியில் பார்த்தாள். நல்லாதான இருக்கொம் கொஞ்சம் கலர் கம்மி அதான் என்று சொல்லி அவன் மீது அளவில்லாமல் காதல் கொண்டாள்..
சரி மனதுக்கு ஒருமாதிரி இருக்கே என்று தன் தோழியுடன் அவள் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றாள் . மாமாவ பார்ததிலிருந்தே நான் அவர உயிரா காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் ஆனா அவருக்கு பிடிக்கலைடி .ஆனா அவரு மேலே நான் என் உசிரையே வச்சிருக்கேன்டி என்றழுதாள் .நினைச்செதெல்லாம் கிடைச்சிட்டா அப்புறம் என்னடி குறைவு என்றாள் நந்தினி..
தன் தோழி நந்தினி சரி விடுடி உனக்கு எவனா வருவான்டி என்றாள்.
"தீடிரென்று ஒருநாள் நந்தினிக்கு வேலை கிடைத்து விடஅவள் அமெரிக்கா சென்றாள்"..
காஸ்மட்டிக்ஸ் கம்பனியில் நல்ல வேலை.அவளால் செவ்வந்தியை மறக்க முடியாததால் அவளுக்கும் வேலை தாயார் செய்தாள் .இதை கேட்டவுடன் அமெரிக்கா சென்று வேலையில் சேர தன் வீட்டில் அனுமதி பெற்று தன் மாமா சேரனுக்கு போன் செய்தாள் .அவன் எடுக்கவில்லை .உடனே செய்தி அனுப்பினால்
"அன்பு மாமாவுக்கு நான்வர இரண்டு வருடம் ஆகும் என்றும் உன் மேல் காதலுடன்."
ஒரு சில நாட்களில் அமெரிக்கா சென்று நந்தினியியுடன் வேலைக்கு சேர்ந்தாள்.
"கலர் பிக்கமன்ட் ஷிப்டர்" என்ற அட்வான்ஸ் புராக்ஜட்டில் தன்னை அர்பணித்து வேலை செய்தாள் . கெமிக்கல் என்ஜினியர் என்பதால் அவளுக்கு விரைவில் டீம்லிடர் ஆனாள்..
எவ்வளவு கருப்பானவர்களையும் மாற்றக்கூடிய கீரிம் மற்றும் மருந்துகளை கண்டரிந்து சாதனை புரிந்தாள்..
உலகெங்கும் இவளின் கண்டுபிடிப்புக்கு பாராட்டு வந்த வண்ணம் இருந்தது.எத்தனையோ பெண்கள் ஆண்களின் நிறம் மாறி வசந்தம் வந்ததை பகிர ஆனந்த பட்டாள்.இறைவன் படைப்பில் பல மாற்றத்தை மனிதன் விரும்புகிறான் ஆனால் உண்மையை ஏற்க்க மறுப்பது நியமில்லை என்று தன் பங்குக்கு பகிர்ந்தாள்.
என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்தாலும் அவள் இந்திய பெண்ணாகவே வாழ்ந்தாள்.வசதி வாய்ப்பு தன்னுடைய கலர் என அனைத்திலும் மாறி அசத்தலாக இருந்தாள்.
ஒரு நாள் அவள் மெயிலுக்கு சேரன் கல்யாண அழைப்பிதழ் அனுப்ப அதை பார்த்து அதிர்ந்தாள்.
ஆண்களின் அவசரம்,ஆதிகாரம் போன்றவற்றை உணர்ந்தாள்.அழைப்பிதழில் இருந்த பெண் செவ்வந்தி கண்டபிடித்த மருந்தில் சிகப்பானவள் என்று மெயிலில் பகிர்ந்ததை நினைவு படுத்தி நின்றாள்..
சில மாதங்களுக்கு பிறகு இந்தியா வந்த செவ்வந்தி சேரனை ஏதேச்சையாக சூப்பர் மார்கட்டில் சந்திக்க அசந்து போனான் அவள் அழகை பார்த்து ஏதும் பூமியில் நிலையில்லை என்று உணர்ந்தான் . சேரன் அவன் மனைவியை அறிமுகபடுத்தினான் அவளோ நீங்க அமெரிக்காவில பிக்கமன்ட் ஷிப்டர் கண்டுபிடிச்சவங்க தான என்றாள்.
"யெஸ் என்றாள் செவ்வந்தி"!
உங்களாள தான் டயர் கலர்ல இருந்த நான் இந்த கலருக்கு வந்து இவர பேஸ்புக்ல புடிச்சேன் ,எப்படி இந்த மாதிரி ஐடியா என்றாள் சேரனின் மனைவி.
தன்மனதில் உள்ளவற்றை வெளிபடுத்த முடியாமல் புன்முறுவலுடன் செவ்வந்தி கிளம்பினாள்.
அவளுடைய லைப் ஸ்டைல் பெருந்தன்மை இதை கண்டு வருந்தி செவ்வந்தியையே பார்த்தான் சேரன்.
சில நாட்களுக்கு வருத்ததுடன் வாழ்ந்த செவ்வந்தி, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்தாள் வந்த மாப்பிள்ளை செவ்ந்தியை விட அன்பானவனாக இருந்தான் இருவரும் அமெரிக்கா புறப்பட்டார்கள் .அமெரிக்க வாழ்க்கையில் இருவரும் மூழ்கி போக குடும்பத்தோடு ஜாலியான வாழ்க்கையில் செவ்வந்தி வாழ ஆரம்பித்தாள் .
தன் கணவன் ராம் சொன்னான் செவ்வந்தி இந்த உலகத்தில நீ கிடைச்சது என் வாழ்நாள் அதிர்ஷ்டம் என்றான் கட்டியனைத்து
அவள் ஐ லவ் யூ டியர் என்றாள்..

சேரன் செவ்வந்தியை நினைத்து அழுதான்.
"அவள் அன்பின் பழைய நினைவுகளில்"..

எழுதியவர் : shivasakthi (25-May-17, 12:09 pm)
பார்வை : 443

மேலே