நாகரிகத்தின் உச்சம்

பள்ளிச்செல்லும் பாலகர்கள் இடும் அரை கால்சட்டையினை அளவெடுத்து
பருவமெட்டிய பாவையினர் பலவண்ணங்களில் அணிவது சரிதானா...?

நெடுகவளர்ந்த தென்னைதரும் எண்ணெயினை சிகைக்கேற்ற
நெடுநாட்களாய் நேரமில்லையென சில நங்கையர் சொல்வது மெய்தானா..?

ஆடவர்களின் அலைப்பேசிகளில் அரைகுறையாய் அடங்கிக்கிடக்க
மாடத்து மங்கையர்கள்கூட மலிவுவிலைக்கு வர்த்தகமாவது முறைதானா..?

கடைத்தெருவெல்லாம் கட்டுக்கட்டாய் கதைகளைக் பேசுமளவு
இடைதெரிய மென்னாடை அணிய இயல்பினை மறப்பது எழில்தானா..?

இதழ்மிளிர அடர்வர்ண சாயம்பூச இணையாய் இனம்புரியா மொழிபேச
இலக்கணப்பிழையாய் பெண்ணியவாதிகள்கூட இன்று இதழ்திறக்க மறுக்கின்றனரே...!

மீளாதே ஊரார் உதிர்த்துவிட்ட ஏளனம்செய்யும் பிழைச்சொற்கள்
கேளாயோ புதுமைப்பெண்ணே கேளிக்கைநிறைந்த வார்த்தைகளை...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (25-May-17, 10:16 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 70

மேலே