கறுப்பு மலருக்கு கவிதாஞ்சலி நாகாமராசன் நினைவுகள்

நீ வீசிய அம்புகள்
மலர்கள் கொய்தன
நீ வீசிய வாள்கள்
பழங்கள் பறித்தன

கவித்துவப் பூக்களில்
தேன் எடுத்தவன் நீ !

பாளம் பாளமாய்
வெடித்த வயல்களில்
கவிதைப் பயிர்
விளைத்தவன் நீ !

நிர்வாணத்தை விற்றவர்க்கு
ஆடை கொடுத்தவன் நீ !

தமிழ்மரபுப் பாதையில்
பயணித்து
புதுக்கவிதைக்கு-ஒரு
ராஜபாட்டை போட்டவன் நீ !

மொழியின் சாத்தியங்களையும்
மொழியின் உன்னதங்களையும்
மூளையின் முழுப் பலத்தில்
திரட்டி எடுத்து வந்தவன் நீ !

உன்னைப் படித்த பிறகுதான்
மொழியின் மலர்ச்சியை
நான் அறிந்தேன் !

உலக அரங்கில்
தமிழின் பெருமையைப்
பேச வைக்க வந்ததாய்
சொன்ன நீ
பேசாமல் கிடக்கிறாய் ;
இப்போது .
நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் ;
உன்னை !

எழுதியவர் : கனவுதாசன் (26-May-17, 8:46 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 115

மேலே