பாடமாக மாட்டோமோ

கும்பிட்ட தெய்வம்
குடி நீர காட்டலையே,
காலம்பூரா காத்திருந்தும்
கைகொடுத்து உதவலையே,
வெள்ளமா காவிரி எப்போதும்
வெகுளியாய் வந்து போவாளோ!

வக்கனையா பேசுவோரும்
வழியேதும் தேடலையே,
செல்வம் சேர்ப்போரும்
சுயநலத்த நினைக்கலையே,
எப்போதும் மாரியாத்தா
எப்படிதான் காப்பாளோ!

மரணம் நேருமென்றால்
மாற்றுவழி தேடிடு,
பருவத்தில் உருவாகும்
கருமேகம் தரும் நீரை தடுத்து
பக்குவமா காத்து
பலபேரும் பருகிட வழி காணு

ஊருசனம் ஒன்றுகூடி
ஆறு, குளம் தூறுவாறு,
வேண்டாத் தாவரத்தை
வெட்டி வெளியேற்று,
பலபேரும் பலனடைய
பெறும் நீரை முறைபடுத்து

ஒரு சொட்டு நீரும்
வெறுமனே போகாம
சேமிக்கக் கற்றுகொடு,
அடுத்தவனை நம்பி
அழிவதைக் காட்டிலும்
நாம் பாடுபட்டும் மாண்டுபோனால்
நாட்டுக்கு பாடமாகமாட்டோமோ?

எழுதியவர் : கோ. கணபதி. (26-May-17, 12:48 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 62

மேலே