உடல் எடை குறைக்கும் நம்ம ஊர் உணவுகள்

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் இன்கிரீடியன்ஸ் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன.

கேழ்வரகு
கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. நிறைவுறா கொழுப்பு (Unsaturated Fat) அதிக அளவில் உள்ளது. இதனால், உடலில் நல்ல கொழுப்பு சேரும். தேவையற்ற கொழுப்பு நீங்கும். கேழ்வரகுக் கஞ்சியை மோருடன் சேர்த்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் உட்பட அனைஇலை
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை இலையை அரைத்துச் சாறாக்கி, காலை ஃப்ரெஷ் ஜூஸாகக் குடிக்கலாம். கேழ்வரகு மாவு, அரிசிமாவுடன் இந்த இலையின் சாறைச் சேர்த்து அரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்தத் தீர்வாக அமைகிறது. கர்ப்பக்காலத்தில் பெண்களுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இதில் அடங்கி உள்ளன.
கொடம்புளி

கொடம்புளியை அன்றாடச் சமையலில் ரசம் வைக்கப் பயன்படுத்தலாம். கொடம்புளி, ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்த பானகத்தைத் தினமும் காலையில் அருந்திவந்தால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புப் படலம் கரையும். கொடம்புளி மாத்திரை வடிவில் சித்த மருத்துவக் கடைகளிலும் கிடைக்கின்றன.

கொள்ளு

எலும்புக்கும், நரம்புக்கும் சக்தி தரக்கூடியது கொள்ளு. கொள்ளுப் பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். ஊளைச் சதையைக் குறைக்கும். கொள்ளுப் பருப்பை ஊறவைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி, பசியைத் தூண்டுவதுடன் உடலுக்கு வலுசேர்க்கும். உடலில் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் கொள்ளைத் தவிர்ப்பது நல்லது. கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

வறுபயறுகள்
தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாதவர்கள் வறுபயறுகள் சாப்பிடலாம். உளுந்து, கம்பு, தினை, ஆளி விதை உள்ளிட்ட தானியங்களை வறுத்துச் சாப்பிடுவதால், உடல் எடை குறைகிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது பெரும்பாலான பயறுகள் கொழுப்புச்சத்துக் குறைவானவை. சில பயறுகள் முற்றிலும் கொழுப்பற்றவை. அதிக கொழுப்புச்சத்து உள்ள நபர்களின் அன்றாட உணவில் பயறுகள் இடம்பெறும்போது, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (Low density lipoprotein-LDL), 22 சதவிகிதம் குறைகிறது.
சிவப்பு அரிசி புட்டு

பாலீஷ் செய்யப்படாத சிவப்பு அரிசி புட்டு உடல்பருமனைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எண்ணெய் இல்லாமல் நீராவியில் வேகவைக்கப்படுவதால் , கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. நாள் முழுவதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்
நொறுக்குத்

எழுதியவர் : (26-May-17, 4:01 pm)
பார்வை : 172

சிறந்த கட்டுரைகள்

மேலே