​ டைரிக் குறிப்பு

​மனிதன் வாழ்ந்தான்
மனிதம் வாழ்ந்தது
ஒற்றுமை ஓங்கியது
ஒன்றியது உள்ளங்கள்
குறிப்பில் உள்ளது ...

சிந்திப்பவர்கள் இருந்தனர்
சிந்தனைகள் வேரூன்றியது
பொதுநலம் இருந்தது
சுயநலம் வீழ்ந்தது
குறிப்பில் உள்ளது ...

அடுத்தவரை நினைத்தனர்
அவரவரை மறந்தனர்
எதிர்காலத்தை நினைத்தனர்
எதிரிகளே வணங்கினர்
குறிப்பில் உள்ளது ...

திட்டங்களை வகுத்தனர்
திறம்பட நிறைவேற்றினர்
சமூகக்கவலை இருந்தது
சமுதாயம் வாழ்ந்தது
குறிப்பில் உள்ளது ...

குறிப்பில் இருந்தவை
குறிப்பறிந்து மறைகிறது
குணாதிசயங்கள் மாறியது
குற்றங்குறைகள் கூடுகிறது
குறுமக்களின் வாழ்க்கையோ
விடையறியா வினாவானது !!!!

( குறுமக்கள் = சிறு பிள்ளைகள் )

​​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-May-17, 8:21 am)
பார்வை : 425

மேலே