வாழ்வு முழுக்க நீ வேண்டும்

தண்ணீர்க் குளத்தினிலே
தாமரைகள் நிறைந்திருக்க
புற்பஞ்சு மெத்தையிலே
பூமரங்கள் மழை தூவ
மலர் வாசம் அங்கே
மனதெல்லாம் நிறைந்துநிற்க
புள்ளினங்கள் ஜதிபாட
தேன் குரலில் குயில் பாட
குயில் பாட்டில் தம்மை மறந்து
மீன்கூட்டம் நடனமிட
மெத்தையிலே நாமமர
நம்கால்கள் நீர் தழுவ
சிறகு நனைத்துஉடல்
சிலிர்த்த கொக்கு வந்து
விசிறிய ஓடைநீர்
உன்னுடல் தனை நனைக்க
குளிர் பட்டு நீசிலிர்த்து
என் கரத்தைப் பிடிக்கின்ற
அழகை நான்ரசிக்க வேண்டும்
உலகை நான் மறக்க வேண்டும்
காலமெல்லாம் வாழ்வினிலே
பூபாளம் இசைக்க வேண்டும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (27-May-17, 1:44 pm)
பார்வை : 175

மேலே