ஹைக்கூவில் பிறந்தவளோ

#1 காதலை கண்டு கடவுளும் பயப்படுகிறான் எங்கே கண்ணீர் சிந்த நேர்ந்திடுமோ என்று…

#2 அந்த கயவன் மரணத்தை சூட்சமமாக வைத்தான் ! அதை ஏன் உன் கண்களில் வைத்தான் பெண்ணே ?

#3 முற்றத்திலிருந்த காற்றுகூட எனை தீண்ட மறுக்கிறது நீ எனை வெறுத்ததால்

#4 பெண்ணே! உன்னை கேசாதி பாதம் வரை பாட என்னால் இயலாது ஏனென்றால் உன் கயல் விழியை பாடவே என் ஆயுள் பத்தாது!

#5 உன் கார்குழலிடை அசைவு வெளியிடும் காற்று போதும் என் ஆயுள் முழுதும் நான் சுவாசிக்க

#6 தீயினை கொண்டு நெருப்பினை அணைக்கும்போது தான் அவள் பார்வையின் ஆளுமை புரியும்

#7 உதடுகள் பேச துடிக்கும் போதுதான் வார்த்தைகள் மௌனிக்கின்றன…

#8 அவள் மூக்குத்தியின் சுடரொளியில் தெரிகிறது என் முகம் அதன் பிம்பத்தில் தெரிவதோ அவள் மனம்.

#9 அவள் கண்ணீர் துளி ஒவ்வொன்றையும் சேமித்தேன் என் பாபங்களை அளக்க….

#10 அவள் வியர்வை துளிகளை சேகரித்து தெறிக்கப்பட்டது தான் அந்த வானத்து நட்சத்திரங்கள்….

#11 தூரத்து அவள் முக சினுங்கலிலும் கண் ஜாடையிலும் தான் வாழ்கிறது என் காதலும் கவியும்… வாழிய குறிப்பறிதல்…
#12 அவள் கண்ணின் கரு மை போதும் என் வரலாற்றை எழுத…

#13 அவள் இடக்கண் ‘ஹை’ என்றால் அவள் வலக்கண் ‘கூ’, ‘க்’ கோ அவள் மதி வதனம்..

எழுதியவர் : பிரசன்ன ரணதீரன் புகழேந்த (27-May-17, 2:39 pm)
பார்வை : 238

மேலே