நலம் விரும்பி

காயும் நிலவெங்கே
மாயும் மலையிருந்து
பாயும் ஆறெனவே
சாயும் - அந்தோ
போயும் போயும்
சாயம் தலைமேலே
காயும் வயதினிலே - ஆ
காயம் வாழ்க்கை வெங்
காயம் என்றெண்ணி
சாயும் மெய்திரிந்து
மாயும் முன்னே
வேய்ங்குழலோன்
மாதவன் பதம் பணிவோம்..!

- கவிஞர் செல்ல இளங்கோ

எழுதியவர் : கவிஞர் செல்ல இளங்கோ (28-May-17, 1:40 pm)
சேர்த்தது : செல்ல இளங்கோ
Tanglish : nalam virumbi
பார்வை : 270

மேலே