தனிமையில் தவிக்கும் கணவன்,மனைவி

அன்பே நான் அறிவேன்
தனிமையில் நீ அங்கு வாடுகின்றாய்
நீயும் அறிவாய் நீ இல்லாமல்
இங்கு நானும் தனிமையில் வாடுகின்றேன்
நம் சிறுவன் எனக்கு இங்கு காவல் தெய்வம்
என் தனிமையை போக்கும் அரு மருந்து
இல்லற வாழ்வில் தனிமை வலியில்
இவன் மழலை, கள்ளச்சிரிப்பு
கனிவு தரும் கனிரசம் தான்

அறிவேன் உந்தன் தனிமை வேறு -அங்கு
உனக்கு ஆறுதலாய் நானும் இல்லை
நாம் பெற்றெடுத்த பிள்ளைக்கனியமுதம் இல்லை
ஆயினும் நாம் இனிதே வாழ்ந்திட திரவியம் தேடிட
கடல் தாண்டி அந்த அரபு நாட்டில் நீ ;
கவலை கொள்ளாதே என் கணவா
என் இனிய முகம் உன் மனதில் இருக்கும் வரை
நம் பிள்ளை முகம் உன் நினைவை சீண்டும் வரை
நம் காதல் உறவு உனக்கு துணை நிற்கும்
உன் தனிமைக்கு அரு மருந்தாய் !
பொருள் தேடி விரைவில் வந்திடுவாய்
சேர்ந்து வாழ்வோம் இங்கே இனிய
நம் நாட்டினிலே தனிமையை மறந்து துறந்து
மீண்டும் ஒரு போதும் எமை விட்டு விட்டு
பொருள் ஈட்ட வெளி நாடு செல்லவேண்டாம்
இங்கு நீ ஈட்டும் பொருளிலேயே சிக்கனமாய்
வாழ்ந்திடலாம்; தனித்து இனி வாழ்ந்திடவேண்டாம்
தனிமை நம்மை ஒருபோதும் வாட்டிடாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-May-17, 3:44 pm)
பார்வை : 316

மேலே