தூய்மையின் உலகம் காதல் ---முஹம்மத் ஸர்பான்

நான் போகும்
திசை பார்த்து
அவிழ்ந்த உன்
கூந்தல் நதிகள்
அடைமழையில்
என் இதயத்தை
குட்டிக் குட்டி
படகுகளாய்
வடிவமைத்த பின்
ஓட விட்டு
விளையாடுகிறது

பருத்தி நூலின்
தோட்டத்தை
நீ சுடிதாராக்கி
அணிகையில்
உலகில் பிறந்த
அழகான
பூக்களெல்லாம்
பொறாமைப்பட்ட
ரகசியத்தை
பூங்காற்று என்
காதில் சொன்னது

பாவப்பட்ட
என் வீட்டுத்
தோட்டத்து
பூக்களில் உன்
விரல்கள்
பட்ட போது
தூய்மையான
ஆனந்தத்தில்
என் மனமும்
உன் கரங்களில்
அர்ச்சணை
தட்டாகி ஆயுள்
முடியும் வரை
உன் பின்னால்
நாய் குட்டியாய்
அலைகின்றது

முதல் மாதச்
சம்பளத்தில்
காதலின்
பரிசாக நான்
வாங்கிக்
கொடுத்த
சேலையை
நீ உடுத்த பின்
எனைப் பார்த்து
சிரிக்கும்
போதெல்லாம்
உலகில் நானும்
தூய்மையான
மனிதனாக
உணர்கின்றேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-May-17, 7:01 pm)
பார்வை : 176

மேலே