பிணம் தின்னும் சாத்திரங்கள்

மனித மனதில் இந்த எண்ணங்கள்
முளைத்த தருணங்கள் துக்கம்
துளிர்விட்டது
தூய உயிர் துயில் கொள்ளும் வேலையில் மண் தான் தின்றது
பழைமையில்..

புதுமையில் அதிகார வர்க்கம்
முதலாம் உலகப் போரில் தின்றது
மனிதனால் இது தொடர்ந்து இராண்டாம் உலகப்போரில் ஒருவானால் தின்னப்பட்டது
பல லட்டசம் உயிர்கள்..

பிணம் தின்னும் சாத்திரம் நம் கண்ணில் அங்காங்கே கண்டங்களில்
சரித்திரமாய் வளர்ந்து வந்தது
சிங்களன் தமிழனை தின்ற நிலை
மறந்து போகுமா
எத்தனை எரிமலை உறங்கி நிற்கிறது தெரியுமா கழுகை பார்த்து..

மனிதா வாழ்நாள் கொஞ்சம் தானடா
மனிதனை விழுங்க உனக்கு எத்தனை மடமையடா
உரிமையை மறுத்து உயிரை தின்னும் நிகழ்வா பெரிது..

உயிர் வேண்டுமானால் சுடுகாட்டுக்கு போய்விடு
உயிரோடு இருக்கும் உறவை தின்ன உனக்கு உரிமை இல்லையடா..

நம் வாழ்நாள் வெற்று காகிதம்மடா
நீ விட்ட கறைகள் காயது ஒருநாளும்
காகிதத்திலடா
பிணம் தின்னும் சாத்திரத்தால் சரித்திரம் பேசாலாம் உன்னை!
நீயும் ஒரு நாள் பிணம்தானடா...

−சிவசக்தி,புதுவை.

எழுதியவர் : சிவசக்தி (31-May-17, 9:01 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 177

மேலே