அஞ்சலி

கவிக்கோ. அப்துல்ரகுமான் அவர்களுக்கு
அஞ்சலி.
*
கவிக்கோ. அப்துல்ரகுமான் மகரந்தச் சிறகு.
கஜல் கவிதைகள்.
1,
இறந்த பிறகும்
என் கண்கள்
திறந்தே இருந்தன
எல்லாம் பழக்கம் தான்
இப்போதும் உனக்காகக்
காத்திருக்கிறேன்.
2.
இறைவா!
எங்கெங்கோ
தேடிப் பார்த்து விட்டேன்
நீ கிடைத்து விடுகிறாய்,
மனிதன் தான் கிடைப்பதில்லை.
3.
சோகத்தில் ஏன்
சிரிக்கிறாய் என்கிறாய்?
இருள் சூழும்போது தான்
விளக்ளேற்ற வேண்டும்.
4.
மரணத்தைப் பற்றிய உண்மையை
வாழ்கிறவர்களிடம் கேள்.
பயணிக்கு ஒரு சத்திரத்தின் முகவரி
மற்றொரு சத்திரத்தில் கிடைக்கிறது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Jun-17, 9:50 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : anjali
பார்வை : 86

மேலே