நீ துவைத்த மனம்

கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !

பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !

அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !

துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெஞ்சு - நீ
...துவைத்தமனம் பிஞ்சு - நீள்
...துயில்கொடுக்கும் நஞ்சு -இது
...தொடர்கதையாய் ஆகுமுன்னே
...தொட்டணைத்துக் கொஞ்சு !

உறங்குநிலை கண்டதடி
...உள்ளிருக்கும் மூச்சு - உடல்
...உணர்விழந்து போச்சு - இது
...உறவுகளின் பேச்சு - மனம்
...உருக்குலைந்தும் குறையவில்லை
...உன்னினைவின் வீச்சு !

துறந்திடவே எண்ணுகிறேன்
...துதிபலவும் பாடி - விதி
...துரத்துதடி தேடி - இனித்
...துளிர்விடுமோ தாடி - உடல்
...துண்டுகளாய் போனபின்னும்

எழுதியவர் : பாவலர் சீராளன் (2-Jun-17, 5:04 pm)
பார்வை : 189

மேலே