வீட்டுக்கு வீடு வாசல் படி

வீட்டுக்கு வீடு வாசல் படி


சண்முகம்- பங்கஜம் தம்பதிகளுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களுக்கு பின் பிறந்தவன் மாதவன். அவனுக்கு இரு வருடங்களுக்குப் பின் தேவகி பிறந்தாள். தாயின் செல்லபிள்ளையாக மாதவன் வளர்ந்தான். காலம் சென்ற தனது தகப்பனைப் போல் அவன் தோற்றத்தில் இருந்ததால் அவனுக்குக் கேட்டதை வாங்கிக் கொடுத்தாள் பங்கஜம். மாதவன் பத்து வயதாகுமட்டும் பெரு விரலைச் சூப்பியவாறே தாயின் சேலையை பிடித்தபடி அவள் அருகே தூங்குவான். குளிப்பாட்டுவது. உணவு ஊட்டுவது, தாலாட்டு பாடி கதை சொல்லி தூங்கவைப்பது,. பாடசாலைக்கு கூட்டிப்போய் கூட்டி வருவது, இப்படி மாதவனை தன் அரவணைப்பில் வளர்த்தாள் தாய். வீட்டில் ஒருவரும் அவனைக் கண்டிக்கக் கூடாது. அவனும் தாய் கீறிய கோட்டுக்குள் வளர்ந்தான். அவனுக்கு நண்பர்கள் என்று ஒருவரும் இல்லை என்றே சொல்லலாம். சகோதரியோடு கூட அவன் அவ்வளவுக்கு நெருக்கமில்லை.

பங்கஜம் சுபாவத்திலேயே கோபக்கா]ரி. பிடிவாதக்காரி. தான் நினைத்ததேயே சாதிப்பவள். எவர் சொல்வதையும் கேட்கமாட்டாள். காரணம் செல்வம் படைத்த பெற்றோருக்கு அவள் ஒரே மகள். அவளுக்கு கணவனாக வந்த சண்முகம் அமைதியானவன். அப்பாவி. மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டன்.

சண்முகத்துக்கு மகள் தேவகி மேல் தனிப்பிரியம். காரணம் அவள் பிறந்த ஒரு வருடத்துக்குள் சண்முகத்துக்கு மனேஜராக வங்கியில் பதவி உயர்வு கிடைத்தது. அதுவுமல்லாமல் தேவகி காலம் சென்ற தனது தாயைப் போல் தோற்றம் இருப்பதும் ஒரு காரணம். சண்முகம் குடும்பத்தில் பங்கஜம் தன் இரு பிள்ளைகளையும் வேறு படுத்தி நடத்துவதால் எப்போதும் பிரச்சனைகள் இருந்தே வந்தது.

மாதவனுக்கு நல்ல குடும்பத்தில் அமைதியான காயத்திரியை திருமணம் செய்துவைத்தார்கள். வீணை வாசிப்பதில் தாய் சாந்தம்மாள் போல் திறமையானவள். தாயின் தேகநலம் கெட்டதால், அவள் பாவித்த சரசு வீணையை சாந்தம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க வசிக்கத் தொடங்கினாள். காயத்திரியுக்கு இசையை முறைப்படி சாந்தம்மாள் கற்றுக் கொடுத்தாள். இரு சகோதரிகளில் காயத்திரி மூத்தவள். பொறுமையானவள். தாயுக்கு தேக நலம் சீராக இல்லாததால் குடும்பத்தை நடத்துவது அவள் தலையில் விழுந்தது. தகப்பன் ஒரு குடிகாரன். அவரை குடிக்காமல் நிறுத்துவது அவளுக்கு ஒரு சவாலாக அமைந்து விட்டது. தினமும் நிம்மதிக்காக அரைமணி நேரமாவது தாயுக்கு அருகே அமர்ந்து வீணை வாசிப்பாள்

******
மாதவனுக்கு பல திருமணங்கள் பேசி வந்தது. பெண் பார்க்க போனபோது பங்கஜம் கேட்ட கேள்விகளுக்கு பெண்கள் கொடுத்த பதில்கள் அவளுக்குத் திருப்தியாக இருக்கவில்லை. இறுதியில் காயத்திரியின் அமைதியான பதில்களும் வீணை வாசிப்பும் அவளே தனக்கு மருமகளாக வர பொருத்தமானவள் என பங்கஜம் தீர்மானித்தாள் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற போது காயத்திரி விரும்பி எடுத்துச் சென்ற ஒரு பொருள், தாயின் கட்டளைப்படி வீணை ஒன்று மட்டுமே.

“ மகள். உன் மனதில் கவலைகள் மறக்க தினமும் சில நேரம் வீணை வாசிக்க மட்டும் தவறாதே.” என்று சாந்தம்மாள் மகளுக்கு சொல்லி அனுபினாள்.

மாதவனும் காயத்திரியும் தனிக்குடித்தனம் போவதை பங்கஜம் விரும்பவில்லை. எங்கே தன் செல்ல மகன் தன்னைவிட்டு விலகிப் போய்விடுவானோ என்ற பயம் அவளுக்கு. சண்முகம் எவ்வளோ சொல்லியும் அவள் சம்மதிக்கவில்லை. திருமணமாகி வந்த புதுதில் காயத்திரிக்கு மாமியாரின் சுய ரூபம் தெரியவில்லை. மாதவனோடு காயத்திரி நெருங்கிப் பழகுவதை பங்கஜம் விரும்பவில்லை. எங்கே தன் மேல் தன மகனுக்கு அன்பு குறைந்து விடுமோ என்ற பயம் பங்கஜத்துக்கு. தன் வெறுப்பை படிப்படியாக காயத்திரி மேல் காட்டத் தொடங்கினாள். முழு சமையல் வேலைகள், வீட்டு வேலைகள் யாவற்றையும் காயத்திரி மேல் போட்டாள். எதுக்கெடுத்தாலும் காயத்திரி செய்த வேலைகளில் குறை கண்டுபிடித்தாள். கை நீட்டி மருமகளை அடிக்காதது ஓன்று மட்டுமே. காயத்திரி பிறந்த வீட்டுக்குப் போவதை எதிர்த்தாள். மருமகளை ஒரு அடிமையாகவே பங்கஜம் நடத்தினாள். சண்முகம் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்க மறுத்தாள்.

மாதவன் ஒருநாளாவது மனைவியின் சரசுவீணை வாசிப்பைக் கேட்டு ரசித்ததில்லை. அவனுக்கும் இசைக்கும் வெகு தூரம். தினமும் தாய் சொன்னபடி காயத்திரி வீணை வாசிப்பாள். வெட்டுக்கு வந்தவர்கள் காயத்திரியின் வீணை வாசிப்பை கேட்டு பாராட்டினார்கள். தன் மகள் தேவகியால் சாதிக்க முடியாததை தன் மருமகள் செய்து பலரின் பாரட்டைப் பெறுகிறாளே என்ற பொறாமை பங்கஜ்துக்குள் படிப்படியாக வளரத் தொடங்கியது. தன் கணவனுக்கு காயத்திரி தனது மாமியாரின் போக்கைப் பற்றி எவ்வளவோ சொல்லி அழுதாலும் அவன் தாயுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தன் மகன் காயத்திரியோடு வெளியே பீச்சுக்கோ., சினிமாவுக்கோ அல்லது ரெஸ்டுரான்ட்டுக்குப் போவதை பங்கஜம் விரும்பவில்லை. மாதவனின் தாயின் போக்கில் காயத்திரிக்கு வெறுப்பு ஏற்பட்டது ஆனால் அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை..

காயத்திரி தன் தாயுக்கு தன் மாமியாரின் போக்கை பற்றி எடுத்துச் சொனாள். மாமியாரின் குணம் தெரிந்திருந்தால் தான் அந்தக்குடும்பத்துக்குள் மருமகளாகப்; போக சம்மதித்து இருக்கமாட்டேன்’ அம்மா என்று தாயுக்கு காயத்திரி சொன்னாள்
“ மகள். எது நடத்தாலும் பொறுத்து நட. உன் மாமியார் உனக்குத் தாயைப் போல. வீணை மட்டும் தினமும் உன் மன நிம்மதிக்கு வாசிக்கத் தவறாதே சரஸ்வதி உனக்குத் தந்த கலை” என்றாள் சாந்தம்மாள்.
.
அன்று எதிர்பாரத விதமாக மனைவி காயத்திரிக்கு காஞ்சிபுரப் பட்டுச் சேலை ஒன்றை அவளது பிறந்த நாளுக்கு மாதவன் வாங்கிவந்தான் . அதுவே வீட்டை போர்களமாக்கிற்று.

“ஏன்டா மாதவா இந்த வீட்டில் உனக்கு உண்டை மனைவி வரமுன்பிருந்தே அம்மாவும் தங்கச்சியும் இருப்பது தெரியாதா. ஒரு சேலை மட்டும் வங்கி வந்திருக்கிறாய். நீ செய்தது சரியா? பங்கஜம் கோபத்தோடு மகனை கேட்டாள்.

“அம்மா இன்று காயத்திரியின் பிறந்த நாள், அது தான்..” மழுப்பினான் மாதவன்.

“ஏன் எங்கள் இருவருக்கும் பிறந்தநாள் வருவதில்லையா. அதுவும் இவ்வளவு விலை உயர்ந்த சேலை பிறந்த நாள் பரிசாக வாங்க வேண்டுமா. இது முக்கியமா?

மாமியின் நச்சரிப்பைக் கண்ட காயத்திரி, மாதவன் வாங்கி வந்த சேலையை அவனிடமே திருப்பிக் கொடுத்து “அத்தான் எனக்கு’ இந்த சேலை வேண்டாம். என் பிறந்த நாளை நினைத்து வாங்கி வந்ததுக்கு நன்றி. மாமிக்கு நீங்கள் எனக்கு சேலை வாங்கி வந்தது பிடிக்கவில்லை. வீட்டில்; இதனால் பிரச்சனைகள் வர வேண்டாம்” என்றாள்.

மகனுக்கு எது சமைக்கவேண்டும், எது கூடாது என்று முடிவேடுப்பது பங்கஜம். திருணமாகி நான்கு வடங்களாகியும் காயத்திரிக்கு குழந்தை இல்லாதது மேலும் மாமியார் மருமகள் உறவில் விரிசலை அதிகரித்ததே தவிர ஒற்றுமையை உருவாக்கவில்லை. மாதவனுக்கு இனொரு திருமணம் செய்துவைக்க பங்கஜம் சிந்தித்போது சண்முகம் அதை முற்றாக எதிர்த்தான்.

“பங்கஜம் உன் மருமகளோடு உன் போக்கை மாற்றிகொள். அவர்கள் உறவில் தலையிடாதே என்று பல முறை சண்முகம் சொல்லியும் அதை பங்கஜம் உதாசீனம் செய்தாள்.

அன்று அந்த சம்பவம் நடக்கும் என்று காயத்திரி எதிர்பார்கவில்லை.
பங்கஜதுக்கு அன்று கணவன் மேல் என்றுமில்லாத கோபம். காயத்திரியின் சமையலை குறைசொல்லப் போய் சண்முகம் மருமகளை ஆதரித்துப் பேசியதே அக் கோபதுக்கு முக்கிய காரணம்.அச்சமயம் காயத்திரியின் வீணை ஒலி மேலும் பங்கஜத்தின் கோபத்தை உச்கக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. நேரே வீணை வசிக்கும் காயத்திரியிடம் போனாள்.

“ பொதம் நிறுத்து உன் வீணை வாசிப்பை. என்ன வீணைக் கச்சேரி நடத்தப்போகிறாயா? இது யார் வீடு என்று நினைதிருக்கிறாய்? .இனி இந்த வீட்டில் உன் வீணை சத்தம் என் காதில் கேட்கக்கூடாது. இந்த வீணையை உன் அம்மாவிடம் கொடுபோய் திருப்பிக் கொடுத்துவிடு. என் கட்டளையை மீறினால் இந்த் வீணை இருந்த இடம் தெரியமால் போய் விடும்” என்று தனது கோபத்தை காயத்திரிமேல் பொரிந்து தள்ளிவிட்டு போய்விட்டாள் பங்கஜம்”

காயத்திரி மாமியாரின் கட்டளையை எதிர்பா]ர்கவில்லை. அந்த வீட்டில் அவளுக்குத் துணையாக இருந் வீணையை பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையிட்டு காயத்திரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
மாமியரை எதிர்த்து அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவீட்டில் வீனையின் நாதம் ஒய்ந்தது. வேலையால் வீடு திரும்பிய மாதவனிடம் நடந்ததைச்’ சொல்லி காயத்திரி அழுதாள்.

“ இங்கைபார் காயத்திரி, இந்த வீட்டில் என் அம்மா வைத்தது தான் சட்டம். அவவின் விருப்பத்துக்கு எதிராக இந்த வீட்டில் ஒன்றுமே நடக்க கூடாது. அவள் எதிர் பேச்சு இல்லை. நீ அவ சொன்னபடி வீணையை கொண்டுபோய் உன் அம்மாவிடம் கொடுத்துவிடு. உன் வீணை இசையை
இரசிக்க இந்த வீட்டில் ஒருவரும் இல்லை” என்றான் மாதவன்.

தனக்குச் சாதகமாக கணவன் பதில் சொல்வான் என்று எதிர்பார்த்த காயத்திரி, கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போய் சிலையானாள்.
. . *******
“என்ன பங்கஜம், தேவகிக்கு பேசி வந்திருக்கும் மாம்பிள்ளைக்கு தனியார் நிறவனம் ஒன்றில் சிரேஷ்ட மனேஜர் உத்தியோகமாம். கார் கூட நிறுவனம் கொடுதிருக்காம். .நீ என்ன சொல்லுகிறாய்?. உனக்கு தேவகிக்கு பேசி வந்த மாப்பிள்ளை விருப்பம் தானே? மனைவியைக் கேட்டார் சண்முகம். பங்கஜத்தின்’ அனுமதி இல்லாமல் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்பது சண்முகத்துக்கு நல்லாகத் தெரியும்

“ நான் ஏற்கனவே மாப்பிள்ளை குடும்பத்தைப்பற்றி விசாரித்தேன். அந்த குடும்பம் எங்கடை குடும்பத்தைப் போலத் தான். . மாப்பிள்ளை ரவீன்திரனுக்’கு ஒரு தங்கச்சி மட்டுமாம். கல்லூரி ஒன்றில் கணித ஆசிரியையாக இருகிறாளாம். படித்த குடும்பம்மாம். தாயும் படித்த பட்டம் பெற்ற தமிழ் ஆசிரியையாம். என்னைப்போல் கட்டுப்பாடு உள்ள்வளாம். தேவகிக்கு பொருத்தமான மாமியார் என்று நான் நினைக்கிறேன் ” என்றாள் பங்கஜம். வீட்டில் மறு பேச்சுக்கு இடம் இருக்கவில்லை. ஒரு மாதத்தில் ஆடம்பரமாக ரவீன்திரனுக்’கும். தேவகிக்கும் திருமணம் நடந்தேறியது. காயத்திரி பெற்றோருக்கு. சண்முகம் எவ்வளவோ சொல்லியும் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் பங்கஜம் அனுப்பவில்லை.

தேவகி கணவன் வீட்டுக்கு போகும் போது “ எப்போதும் என் நினைவாக இது உன் கழுத்தில் இருக்கட்டும் என்று சொல்லி மகள் கழுத்தில் தான் போட்டிருந்த பத்து பவுன் முத்துப் பதக்கம் சங்கிலியையும் அவள் காதுகளில் இரு வைரத்தோடுகளையும் போட்டு அனுபினாள்.

“ இவை எனக்கு என் அம்மா தந்தவை. பரம்பரை சொத்து. எப்போதும் நான் பார்க்கும் போது உன்னிடம் இவை இருக்கவேண்டும்” இரு தடவை தேவகிக்கு சொல்லி அனுப்பினாள் பங்கஜம்.


தேவகி வாய்க்காரி. அதோடு தாயைப் போல் பிடிவாதக்கரி. தனிக்குடித்தனம் போவோம் என்று கணவனை வற்புறுத்தினாள். ரவீந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. அவன் அம்மா பிள்ளை.

“ இங்கை பார் தேவகி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயது வந்துவிட்டது. அதோடு என் தங்கச்சி வைதேகிக்கு திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு. இவர்களைப் பிரிந்து வாழ என்னால் முடியாது” என்று காரணம் காட்டி தனிக் குடித்தனத்துக்கு மறுத்து விட்டான்.

அதுவே தேவகிக்கும் ரவீன்திரனுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள், தோன்றக் காரணமாக அமைந்தது . ரவீன்திரனின் பெற்றோருக்கு மகன் தங்களை விட்டு பிரிந்து போவது துளியளவுக்கும் விருப்பம் இல்லை

தேவகிக்கு திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ரவீன்திரனின் தங்கை வைதேகிக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் பேசி வந்தது. சீதனப் பிரச்சனையில் திருமணம் தடைப் பட்டு நின்றது.

ரவீன்திரனின் பெற்றோருக்கு முதலில் பார்வைக்குப் பட்டது தேவகி’; கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும். இரு காதுகளிலும் இருந்த வைரத் தோடுகளும் தான். மகனிடம் அதைப் பற்றிப் பேசினர்கள்.

“ தம்பி ரவீந்திரா. வைதேகிக்கு பேசி வந்திருக்கிற மாப்பிள்ளைக்கு நல்ல சம்பளத்தில் உத்தியோகம். படித்த என்ஜினியர். . நல்ல சாதி சனம். இது சீதனம் போதாததால் தடைப் பட்டு நிற்கிறது. இதுக்கு உன் உதவி தேவை. அவசியம் நீ. செய்வியா? தாய் கேட்டாள்

“ என்னிடம் அவர்கள் கேட்கும் பணம் அளவுக்கு என் சேமிப்பில் இல்லை அம்மா”

“ தங்கச்சிக்கு நீ செய்யாமல் வேறு யார் உதவி செய்வது. உன் உதவி தேவை “ உனது மனைவியின் நகைகள் தேவை. அவளிடம் பெற்றுத் தரமுடியுமா?

ரவீந்திரன் சில வினாடிகள் சிந்தித்து “ அம்மா இப்போ தேவகி எங்கள் குடும்பதில் ஒருத்தி; அவள் நான் கேட்டால் நகைகளைத் தர மாட்டேன் என்று சொல்லவாப் போகிறாள்? கேட்டுப்பாரக்கிறேன்” என்றான் ரவீந்திரன்

தான் போட்டிருந்த தங்கச் சங்கிலியையும் வைரத் தோடுகளையும் கணவனும். மாமியும் வற்புறுத்திக் கேட்ட போது தேவகியால் மறுக்க’ முடியவில்லை. தேவகியின் நகைகள் வைதேகியின் திருமணத்துக்கு சீதனமாக உதவியது.

தலைத் தீபாவளிக்குத் தேவகி’ கணவனோடு பிறந்த வீடு சென்ற போது பங்கஜம் மகளின் கழுத்தில் தான் போட்ட பதக்கம் சங்கிலியையும் வைரத்தோடுகளையும் காணாது’ திகைத்தாள்

“ தேவகி. எங்கே உன் கழுத்தில் நான் போட்ட சங்கிலியும் காதில் போட்ட வைரத் தோடுகளும்?. என்ன நடந்தது அவைக்கு.” விசனத்துடன் பங்கஜம் மகளைக் கேட்டாள்.

“தன் மாமியாரின் வற்புறுத்தலால் கணவன் கேட்டு தன்’ மைத்துனியின் திருமணத்துக்கு சீதனத்துக்கு கொடுத்து விட்டதாக நடந்த விபரத்தை தேவகி சொன்னாள்”

தேவகி சொன்ன முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த சண்முக சிரித்தபடி” வீட்டுக்கு;வீட்டுக்கு வாசல் படி பங்கஜம்” என்றார்;

******


.
.




“ .

எழுதியவர் : பொன் குலேந்திரன்-கனடா (3-Jun-17, 7:12 am)
பார்வை : 522

மேலே