கவிக்கோர் கவி

திருக்குவளை ஈன்றெடுத்த திருமகனே..
எரு போல தமிழுக்கு ஏரு போல வந்தவனே..
நீ பிறந்த இந்நாளில் உன் புகழ் மணமே எங்குமே..
உன் கவி கேட்டு புவியின் செவியெல்லாம் சிலிர்க்குதடா சிங்கமே...
அஞ்சுகத்தின் மகனாக அவதரித்தாய்.
அஞ்சிடாமல் பல தடைகள் நீ உடைத்தாய்.
நெஞ்சுக்குள் நீதியை நீ படைத்தாய்.
தஞ்சமென உனைக்கொண்டாள் கவித்தாய்.
உன் வார்த்தை மொழிகேட்டு ரசிப்போம்.
உன்மொழியறிவு புலமையை
புசிப்போம்.
தமிழ் மண்ணின் வித்தாய்..
விலைஇல்லா சொத்தாய் ..
தன்மானம் காக்கவந்த ஞானமே..
உன் தமிழ் முன்னே
தலைவணங்கும் ஞாலமே..
..

எழுதியவர் : கு.தமயந்தி (3-Jun-17, 12:06 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 507

மேலே