விநாயகர் பாடல்---நேரிசை ஆசிரியப்பா---

நேரிசை ஆசிரிப்பா :


ஐங்கர முடையோன் ஆனை முகத்தோன்
தீங்கென வருவதைத் தீர்த்திடும் குணத்தோன்
ஓங்கும் ஞான ஒளிபொ ருந்திட
தாங்கும் அவனியின் தர்மம் காப்பாய்
தூங்கா தென்விழி துயரில் தவித்திட
ஏங்கும் மனத்தில் எழுந்தருள் புரிவாய்
நின்தாள் பணிந்து நீங்கீடும்
இன்னலில் கன்னலாய் இதயமும் கனிந்தே......


பானை வயிற்றோன் பார்வதி மைந்தன்
ஏனை தேவரும் இறைஞ்சும் முதலோன்
அரசம ரநிழல் அமர்ந்தகம் குளிர்ந்திட
வரம ளித்திடும் வளர்பிறை நாயகன்
அருகம் புல்லில் அடியவர் மாலையும்
சரண்புகுந் துனக்குச் சாற்றிடும் பொழுதே
நெஞ்ச மெல்லாம் நிறைந்து
மஞ்சம் விரிந்திட மதுரமும் கூடுதே......


முறம்போல் செவியும் முன்புறத் துதிக்கையும்
மறமதி லுயர்ந்தும் மலர்ப்பதம் கொண்டும்
அறவழி தவறும் அசுரரை யழித்துச்
சிறந்து விளங்கும் சிவனின் அம்சமே
நின்னருள் மழையில் நித்தமும் நனைந்திட
மென்னக முருகும் மெழுகாய்த் தொழுதிடும்
உன்றன் வாசலில் உலவியே
கன்றெனத் துள்ளிடும் கவலையும் மறந்தே......

எழுதியவர் : இதயம் விஜய் (3-Jun-17, 1:17 pm)
பார்வை : 2252

மேலே