ஞானமே லட்சியம்

" பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை. ", என்ற வள்ளுவன் வாக்கே அனுதினமும் அனுபவமாய் உணர கொள்கைப் பிடிப்புடையோனாய்,
ஞானமென்னும் அணையாத ஆதவனை அகத்துள் உருவாக்குவதே லட்சியமாய், நாளும் ஒரு சிறு அடி முன்னேறிக் கொண்டு வருகிறேன் ஆமையாய்...
தொடர்ந்து வரும் முயற்சியில் பெற்ற ஞானத்தைவிட, இழந்தவைகளே அதிகம்...

இழப்புகளில் முதன்மையானது காலம்...
இரண்டாமானது
வாழ்க்கையில்
என்றும் இழந்துவிடக்கூடாதென எண்ணிய என் மீது அன்பு கொண்ட சொந்தங்கள்...
இவ்வுலகில் ஏதுவுமே நிரந்தரமில்லை காலத்தின் அரசாட்சியிலே...

இந்த உடலும் என்னால் இழக்கப்படக் கூடிய ஒன்று தானே...
இந்நிலையில் எதை எனது ஆனந்தமாகக் கொண்டாடி மகிழ்வேன்?..

போதையிலும், பொழுதுபோக்கிலும் மனம் நாட்டம் கொள்ளவில்லையே...
சுற்றமெல்லாம் சுகமென்ற விடயம்,
எனக்கு மட்டும் விஷமென்று தோன்றுதே...
கொடியவர்களுக்கு மத்தியிலே நான் வாழ்ந்தாலும் கொடிய செயலாற்ற என் மனம் ஒப்பவில்லையே...

ஞானத்தைப் பெற்றுவிட்டேனா?
பெறப் போகின்றேனா?
ஏதும் அறியேன்...
உணரும் சத்தியத்தை வார்த்தைகளாய் வடிக்கிறேன்...
இதில் எனது பெருமை என்று நான் மார்தட்ட ஏதுமில்லை அன்பே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Jun-17, 2:47 pm)
பார்வை : 364

மேலே