வாழ்வின் தத்துவம்

அன்பைத் தொலைத்தவன் கடவுளேயாயினும் அதற்குரிய தண்டனை கிடைத்தே தீரும் என்பதே அன்பின் தீர்ப்பு.

கருணையில்லா கொலைகளை புரிந்துண்டு வாழ்பவரெல்லாம் தினமும் தன் மனதில் அன்பைக் கொன்று கொண்டிருக்கிறாரென்பதால், அவரின் முடிவும் கருணையில்லா செயலாலேயே முடிவடைந்தே தீருமென்பதே வாழ்வின் அரிய தத்துவம்.

எதை ஒருவன் தன் பலமாகக் கருதித் தன் வாழ்நாள் முழுவதையும் வாழ்கிறானே, அதுவே அவனது பலவீனமாய் மாறி அவனுக்கு முடிவைத் தருகிறது.
இதில் சிறப்பு என்பது எவனுடைய முடிவைக்கண்டு உலகமே வருந்துகிறதோ,
துயரத்தில் ஆழ்கிறதோ,
புனிதரென்று வாயாறப் புகழ்கிறதோ அந்த உலகமக்களிடையே அன்போடு, கருணையோடு வாழ்ந்த சிறந்த மனிதருக்குரியது.
இழிவு என்பது எவனுடைய முடிவைக் கண்டு உலகம் கொண்டாடுகிறதோ,
இழிந்துரைக்கிறதோ,
சந்தோஷமடைகிறதோ,
அந்த உலகமக்களிடையே அன்பில்லாமல், கருணையில்லாமல் வாழ்ந்த மனிதருக்குரியது.
இதையே எல்லா மதங்களும் உரைக்க முற்படுகின்றன.
ஆனால், மனிதனோ அதனை உணர மறந்தான். மறுத்தான்.
மதங்கள் தங்கள் உரைக்க வேண்டியது ஒரே கருத்தை வெளிப்படையாகக் கூறியிருந்தால், எல்லா மதங்களும் ஒன்றாகியிருக்கும்.
ஆனால், அவரவர் வழியில் விளக்க முயற்சித்ததே வீண் குழப்பம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Jun-17, 9:37 am)
பார்வை : 2249

மேலே