யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – தமிழ் ஈழம்

கந்தர்மடம் வீதிகளில் என் அப்பா பெர்முடா உடம் சுற்றி வந்த காட்சிகளை என் கண் முன் வரைகிறேன் . அரசடி தெருவில் தன் சுற்றமும் நண்பர்களுடனும் சே -குவேரா பற்றியும் பிற நாட்டு போராளிகள் பற்றியும் ஆழ மரத்துக்கு அடியில் மணி கணக்காக கதைகள் கதைத்துக் கொண்டு இருந்த கட்சியை நான் என் கண் முன் வரைகிறேன் .
இன்று அந்த காட்சியை காண நான் செல்லும் வேளையில் அந்த பூ பூமி போர்க்கள பூமியாக மாறி இருக்குறது என்று என்னும் பொழுது மனம் வேதனை படுகிறது என்று சொன்னால் மட்டும் மிகையாகாது .
சிறு வயதில் இருந்தே நான் என் தந்தையின் வாயிலாக கேட்டு அறிந்த தனி உலகம் தன் யாழ்ப்பாணம் . அங்க வாழ்வதையே என் அப்பா எப்போதும் விரும்பினார் . அவருடனான எங்கள் உரையாடலில் அவர் அதிகம் சொல்லும் வசனம் இதுவாக தன் இருக்கும் “ தமிழனா பிறக்க வேண்டும் அதுவும் யாழ்ப்பாண தமிழனாக பிறக்க வேண்டும் ” இதை கேட்ட எங்கள் சேவிகளும் அதையே விரும்பின .
நல்லூர் கோவில் தேர் திருவிழா . – அன்று அங்கு இருக்கும் சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆனந்தம் தான் . அங்கு வரும் அனைவருக்கும் குளிர் பணம் கொடுப்பதற்காக என் அப்பா தன் வீட்டின் கினரையே அவர் பயன்படுத்தினர் என்று சொன்னால் நம்புவீர்களா ? ஓம் . அதில் ரஸ்னா போன்ற ஒன்றை ஊத்தி ஐஸ் கட்டிகளை போட்டு குளிர் பாணம் தயாரித்து குடுத்தவராம் . ஆட்டம் பாடம் என்று கலை கட்டிய திருவிழாகவேய இருக்கும் . விடுமுறை என்று என் தாத்தாவும் வந்துவிடுவாராம் . பிறகென்ன . சாக்லேட் , பைதம்பணியாரம் தொதல் மழை பொழியுது என்று தன் அர்த்தம் .
1980s – இக்கட்டான காலகட்டம் . என் அப்பா உடன் சேர்ந்து அவரோட நண்பர்களும் வெளி நாட்டுக்கு செல்ல தயாராகின . அவர் சென்று மத்தவர்களையும் தன்னுடன் இருக்க வருமாறு அழைப்பு விடுத்தார் . தன் முதல் மாத சம்பளத்தில் அங்கே பட்டினியால் வாடும் தன் குடும்பத்துக்கு அனுப்பாமல் தன் நண்பன் வெளி நாடு சென்று அவர் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அவருக்கு குடுத்தார் . ஒர் அறைக்குள் 20 பேருடன் ஒன்றாக வசித்து ஒன்றாக சமைத்து உண்ணும் உணவின் சுவையை அன்று அறிந்தார்களோ இல்லையோ இன்று அதை நினைத்து மேல் சிலிர்த்து போயிருக்கிறார்கள் .

உ றவு களுடனான பிணைப்பு அங்கு அதிகமாகவே இருந்தது என்பது உண்மை தான்.

தொடரும் . . . .

எழுதியவர் : பிரசாந்தி மோகன் (4-Jun-17, 11:28 am)
சேர்த்தது : பிரசாந்தி மோகன்
பார்வை : 326

மேலே