அன்பே கடவுள் 1

அன்பே கடவுளடா
.
ஆத்திகம் என்பதும்,
நாத்திகம் என்பதும்,
அவரவர் பார்வையிலடா..
.
ஏகன் என்பதும்,
அனேகன் என்பதும் ,
கடவுளின் பிம்பமடா..
.
பிணத்தை மிதித்து
கடவுளை காண்பதா!!!
என்ன புண்ணிய கணக்குடா..
.
கீழே உள்ளவரை
மேலே உயர்த்தினால்
நீயும் கடவுளடா..
.
அண்ணைய துறந்து
திண்ணையை வணங்குவது
என்ன அர்த்தமடா..
.

அரசமரத்தை வெட்டி ,
ஆயிரம் முறை சுற்றுவது
என்ன நம்பிக்கையடா..
.
குழந்தை பேச்சில்
கரையாதவன்
கடவுளை காண ஒடுவான்..
.
குழந்தை முகத்தில்
கடவுளை காண்பவன்
கடமையாற்றும் வழி செல்வான்..
.
கடவுள் இல்லை
____என்பது அறியாமை,
ஒன்பதில் ஒன்றில் மட்டும்
____வாழ்வது விந்தையடா,
ஒன்றில் மட்டும் வாழ்கிறோமா??
____அறிவின் உச்சமடா..

அறிவியல் வானம் தொட்டலும்
ஆசையை அடக்கவில்லை ,
அளித்தவளை அணைத்திடும்
____நிலை வருமுன்
அறிவு கண்ணை திறந்திடுடா..


ஆயிரத்துக்கும் மேல்
____வருகிறார்கள் போகிறார்கள் ,
அன்பின் அடிமைகள் பெயரே
____நிலைப்பது விந்தையாடா..
.
குயில்கள் இரத்ததில்
குளித்த குரங்கின்
கையில் பூமாலை
கொடுத்தது யாராடா..
.
குயிலின் சில கூட்டம்
குரங்கிற்கு பாமாலை பாடுவது
என்ன கொடுமையாடா ..

எழுதியவர் : வாசு செ.சா (7-Jun-17, 9:03 am)
Tanglish : annpae kadavul
பார்வை : 815

மேலே