ஹைக்கூவில் பிறந்தவள் - பேதை

இலையுதிர் கால இரண்டாம் திங்கள் மூன்றாம் சாமத்தில் ஜனித்தவளோ
எனை முழுதும் ஆட்கொள்ள உதித்தவளோ....

கருவுக்குள் பூவாக பூத்தவளோ நந்தவன பூக்கள் பொறாமையுற வைத்தவளோ அந்த வானத்து விண்மீன் கூட்டம் கண்டேனடி உன் வருகையை எண்ணி களிக்க மகிழ்ந்தேனடி....

மூச்சை பகிர்ந்து உயிர் உடல் கொண்டாயடி
ஊண் பகிர்ந்து உடல் கொண்டாயடி
ஐஇரு திங்கள் இருளில் காத்திருப்பாயடி
எனக்காக....

காரிருள் கருவறையில் அத்தையவள் ஜதி சொல்ல நாட்டியம் அரங்கேற்றியவளோ
மாமனவன் கூத்தாட எனை அங்கே மறந்தாயடி....

என் நினைவேற்க மனம் வளர்த்தாயடி
என் உயிர் ஏற்க உடல் வளர்த்தாயடி
எனை முழுதும் ஏற்க முழுமையானாயோ
அடி என்னவளே....

மாதுளை நிறம் கொண்டு இதழ் படைத்தான் திராட்சையின் வண்ணம் கொண்டு கண் வரைந்தான் சப்போட்டையின் தோல் கொண்டு உடல் செய்தானோடி அந்த பிரம்மன்...

மெய்வாய் திறந்து வீர் கொண்டு எழுந்தாயோடி கண்ணீர் வரத்தின்றி அழுதாயோடி எனை இவ்வுலகில் காண துடித்தாயோடி...

எட்டுத்திக்கும் ஒலித்ததோ மங்கள நாதமடி அது உன் அழுகுரல் தானடி மானும் மயிலும் அடுதடி குயிலும் கிளியும் பாடுதடி
உனை இப்புவியில் வரவேற்க ஆனந்த கூத்தாடுதடி....

குருதியின் ஓட்டமும் தெரியுதடி பச்சை கொடிகளும் படருதடி தொப்புள்கொடியின் ஈரமும் காயுதடி பல்லில்ல வாயும் தெரியதடி....

மூன்றாம் அகவையில் நானிருக்க உன் முகம் பார்த்து ஆர்ப்பறிக்க உன் பிஞ்சு கைவிரல் தொட்டேனடி நீயோ சிலிர்த்தாயடி...

தத்தி தத்தி நீ தவள எட்டி பிடித்து நடைபயில உன் கால்கள் சிவக்க மனம் வலிக்குமடி பச்சரிசி சாதம்தனில் நெய்யிட்டு நீ உண்ணும் அழகை பார்த்து உச்சி கொட்டுமடி...

உன் பெயர் கேட்க நான் காத்திருக்க என் பேர் சொல்ல நீ வாயெடுக்க காற்றுக்கு கொஞ்சம் பஞ்சமடி உன் செவிதழ்கள் அதற்காக கெஞ்சுதடி...

அம்மையும் அப்பனும் மறந்து போய் பால் மணம் மாறது மாமன் என்று மழலை சொல் கேட்டேனடி அந்த சொல்லிலே முழுமையானேனடி அடி என்னவளே ஹைக்கூவில் பிறந்தவளே...

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

எழுதியவர் : பிரசன்ன ரணதீரன் புகழேந்த (11-Jun-17, 9:42 pm)
பார்வை : 276

மேலே