விழி அல்ல இது

விழி அல்ல இது
என்னை வெட்டிச்
சாய்த்த
கூர்வாள்.....
அல்லவா......?

திரும்பி நீ
பார்க்கும்
போது.....
திமிர்பிடித்த
நானும்
திணறித்தான்
போனேன்.....!!

கருவிழியின்
சொந்தக்காரி
அருவியின்
அழகுதான்
அள்ளித்தின்னும்
அமுதமும்
நீதானே.....

ஆயிரத்தில்
நீயொருத்தி
தான்....பேரழகி.....!!

மஞ்சள்
நிலவே.....
கொஞ்சும்
கிளியே....
உந்தன்
இமைகள் கூட
என்னை
இழுக்குதடி
வம்புச்சண்டைக்கு.....!!

கண்மலரும்
பூவொன்று
கண்டேன்.....
அது
களவுபோகாமல்
காத்திருந்தேன்.....!!

விண்மீன்கள்
பார்த்ததில்லை
உன்கண்களைப்
பார்த்தபின்பு.....
நிஜத்தை விட்டு
போகமனமின்றி.....!!

பச்சைக்கிளி
உன்
நாணத்தில்.....
வெட்டுக்கிளியும்
வெட்கப்பட்டு
வீழ்ந்த கதை
நீயறிவாயா.....?

வஞ்சிக்கொடி
என்னை
வஞ்சிக்காதே
வாழ்க்கை
முழுவதும்
கொஞ்சிக்கடி.....!!

செல்லமே
உன்னிதழ்
நாண்பருகினால்
வெல்லமும்
வேப்பம்
கஷாயம்தான்
எனக்கு......!!

இளமாலை
நேரம்தான்
என்னை
உசுப்புதடி.....
சுகமான
காதலின்
இதமான
பொழுதுகளை
எண்ணி எண்ணி.....!!

எழுதியவர் : thampu (11-Jun-17, 11:15 pm)
Tanglish : vayili alla ithu
பார்வை : 380

மேலே