காதலி தேடல்

என் எதிர் காலத்தை உனதாக்கிக்கொள்ள
என் நிகழ் காலத்தை விற்றுவிட்டேன் தனிமைக்கு ......

காத்திருப்பின் சுகம் அதை
முழுமையாய் கற்றுவிட்டேன்..........

போதும் இந்த தனிமை பயிற்சி

ஆதவனின் வெப்பத்தில் அலைந்தது போதும்
என்னவளின் வெப்பத்தில் நனைந்திட வேண்டும் .........

காதல் கற்றவன் சொன்ன பாடம் போதும்
நானும் புலம்பிட என்னவள் வேண்டும் ..........

தனியாய் நடக்கும் கால் தடத்திற்கு
துணையாய் என்னவள் நிழலும் வேண்டும் ..............

இரவில் சரியாய் தூக்கம் கெட
என்னவளின் கனவுகள் வேண்டும்...............

என் அமைதியை மகிழ்வாய் மறந்துபோக
என்னவளின் நினைவுகள் வேண்டும் .........

தேடல் தேடும் எந்தன் கண்ணில்
இன்றாவது
என்னவள் யாரென ........
தெரிந்திட வேண்டும் !!!!!!!!!!

எழுதியவர் : வான்மதிகோபால் (13-Jun-17, 2:33 pm)
Tanglish : kathali thedal
பார்வை : 543

மேலே