சந்தியாவின் கொலைமுயற்ச்சி காதலானதுஇனிமையான காதல் காவியம்

அன்று தலைநகரம் நகரம் கலைகட்டியது,பிரமாண்டமான ஏற்பாடு மண்டபம் முழுவதும் கூட்டம் அலை மோதியது .ஆம் மிகப் பெரிய பணக்காரர் ,தொழில் அதிபர் மற்றும் அரசியல் வட்டாரம் என அவர் புதழ் விரிந்தோடியது அவர்தான் ஏழைமுத்து,
சதாரணமனிதனாக இருந்து மிகப்பெரிய பணக்காரர் ஆனவர் அவரின் ஒரே மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் அன்று..

மண்டபத்தில் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் இருந்தனார்….
இரவு பெண்அழைப்பு முடிந்தது….
இரவு மணி 1 ஐ தாண்டியது…
மண்டபத்தில் அழகான பெண் ஒருவள் தண்ணீர் பாட்டில் எடுக்க வந்தாள் அப்பொழுது கோபால்சாமி பெண்ணுக்கு மாமனார் அந்த பெண்ணை பார்த்து ..
நீ யாரும்மா என கேட்டார்..
அவள் நான் பெண் வீட்டில் வேலை பார்க்கிறேன் ..
என் பெயர் சந்தியா என்றாள்..
என்ன வேண்டும் உனக்கு என கேட்டார்…
சந்தியா தண்ணீர் வேண்டும் என்றாள்..
வா தருகிறேன் என்று அவளை ஒரு ரூம்முக்கு இழுத்தார்..
அந்த பெண் வேண்டாங்க..
நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க என்றாள்..
நான் வீட்டு வேலைசெய்தாலும் கௌரவமாக வாழறோம்..
என்னை விட்டுங்க என்றாள்..
அவளை வலுகட்டயமாக இழுத்தார் அந்த பெண்ணின் மேல் ஆடை கிழிந்தது..
அந்த ரூமை தாழிட்டதால் யாருக்கும் அவள் குரல் கேட்க வில்லை...
சந்தியா கத்தினாள் யாராவது காப்பாத்துங்க....
காப்பாத்துங்க என கத்தினாள்..
போதையில் இருந்த கோபால்சாமி அவளை இழுத்து கட்டிலில் தள்ளமுயற்ச்சி செய்தார்..
அவள் அலறினாள் என்னவிட்டுங்க ப்ளீஸ் என்றாள் ..
அவர் விடுவதாக தெரியவில்லை..
பழதட்டில் கத்தி ஒன்றை பார்த்த சந்தியா அதை எடுத்து  ஒரேகுத்து கோபால்சாமியின் கழுத்தில் விழ இரத்தம் பீறிட்டு அடித்தது ..
சந்தியா கத்தினாள் ஏன்டா பெண்கள பார்த்தா

இந்த நாபகம் தான் வருமா உங்களுக்கு...
எல்லாம் பொண்ணுகளும் அப்படி இல்லடா நாயா என்றாள்..
ரத்தம் வெளிவர கோபால்சாமி மயங்கி விழந்தார்…..
அதை பார்த்த சந்தியா கதவை திறந்து சுற்றிலும் பார்த்த போது.....
அப்பா...அப்பா...
என ஒருஆணின் குரல் கேட்டது…..
அந்த குரல் கேட்டு சந்தியா பயந்தாள்..
ரத்தம் கதவின் வழியாக வந்ததை பார்த்து அப்பா என அலறினான் அரவிந்த் கல்யாண மாப்பிளை...
அப்பா என்ன ஆச்சு பா என கத்தினான் ....
சந்தியாவிடம் என்னடி செஞ்ச எங்கப்பாவ என கேட்டபோது அடக்கமாக அமர்ந்திருந்தவள் எழுந்தாள் உள்ளாடை கிழிந்து இருந்ததை கையால் மூடிக்கொண்டு நடந்ததை சொன்னால்...
இதை கேட்ட அரவிந்த் மன்னித்து விடுங்க ப்ளீஸ்..
இங்க இருந்து போய்விடுங்க என தன்னுடைய சட்டையை கழற்றி அவள் மேல் போட்டான் ...
ப்ளீஸ் போய்விடுங்க என்றான்..
அவள் யாருக்கும் தெரியாமல் ரூமுக்கு சென்று தன் உடையை மாற்றி கொண்டு உள் இருந்தாள்...
அரவிந்த் உடனே ஆம்புலென்ஸ்க்கு போண் செய்தான் ...
ஆம்புலென்ஸ் வந்தது உடனே அதில் ஏற்றி தன் அப்பாவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு ஆம்புலென்ஸ் விரைந்தது..
மணி நள்ளிரவு 2 ...ஐ.சி.யு வில் கோபால் சாமி படுத்திருந்தார்...
காலை 5 மணிக்கு மாப்பிள்ளை காணோம் அவர்கள் அப்பாவையும் காணோம் என மண்டபம் முழுவதும் ஓரே பேச்சு பலவாறு பேசப்பட்டன..
அரவிந்த் அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை..
முகூர்த்த நேரம் நெருங்கியது….
ஏழைமுத்துக்கு கோபம் வர காலை 7 மணிவரை எந்த செய்தியும் இல்லை..
சந்தியா மனம் திக்.. திக்.. திக்... என்று இருந்தாள்..
உடனே அரவிந்த் வேறு ஏதோ பெண் தொடர்பு உள்ளதாக நினைத்தனர் மண்டபம் முழுவதும்..
ஐஸ்வரியாவின் நண்பன் ஒருவன் குடும்பத்தோடு வந்தவனை அவசரமாக பேசி கல்யாணம் நடத்தி முடிந்தனர் அவள் உறவினர்கள்...
அரவிந்த் அம்மாவும் உறவினர்களும் அவமானப்பட்டு மண்டபத்தை விட்டு சென்றனர்...
சந்தியா அழுதாள்..
தவறுக்கு அவளும் காரணமென நினைத்தாள்...
அன்று மாலை செய்தி தாளில் முன்னாள் அரசியல் பிரமுகர் கோபால்சாமி எதிரியால் கழுத்தில் குத்தப்பட்டார் என செய்தி வந்தது..
அதை பார்த்த ஏழைமுத்து என்னடா
சம்பவம் இது என மருத்துவமனையை நோக்கி புறப்பட்டார்...
கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார் கோபால் சாமி..
கோபால்சாமியின் மனைவி உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்து அழுதாள்..
என்னடா அரவிந்த் என்றாள் ...
அம்மா இந்த ஆளு பெண்ணுங்க பைத்தியம் பிடித்து அலையரான் அதான் இவனுக்கு என்று கோபபட்டான்..
என்னடா புரியலையே என்றாள்..
அதற்க்குள் ஏழைமுத்து மருத்துவமனைக்கு வந்தார்..
என்னப்பா யாரு…. எந்த கும்பல்….
முன்விரோதமா… ஆள பார்த்தீயா என்றார்..
இல்ல எல்லாம் முகத்தில ஹெல்மேட்போட்டுஇருந்தாங்க யாரையும் பார்க்கலே..

சரிப்பா ஐ.சி.யு ல இருந்து வெளிய வரட்டம் நான் வந்து பாக்கிறேன் என்று கிளம்பினார்…
அரவிந்த் அமெரிக்காவில் படித்தவன் என்பதால் திருமணம் பற்றி கவலை படவில்லை..
ஆனால் நல்லமனதோடு மனித உணர்வுகளை புரிந்தவனாய் இரு்ந்தான்...
மூச்சுகுழல் சீராக இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் அவர் பேசுவதற்க்கு கஷ்டம்தான் என்றனர் மருத்துவர்கள்...
இன்னும் இரண்டு மாதம் இங்கு தங்க வேண்டும் என மருத்துவர்கள் அரவிந்திடம் கூறினார்கள்...
இப்படியே ஒரு பதினைந்து நாள் ஓடியது...
சந்தியா யார்?
அவளைப்பற்றி…
சந்தியா அழகான பெண்.
நீளமான முடி, அழகான கண்கள்………..
ஆனால் சூரியனை போன்ற கோபம் கொண்டவள்……..
கடலை போல அமைதியானவள்…… ரோஜாவை போன்ற அழகானவள்…. சந்தியாவின் பாட்டி ஏழைமுத்துவின் தூரத்து சொந்தம் என்பதால் சந்தியா அங்கு தங்கி அரசு கல்லூரியில் பி.சி.ஏ இறுதி ஆண்டு படித்துவந்தாள் ,திருமணத்தில் நடந்த நிகழ்வு அவளை பெரிதும் பாதித்தது...
அந்த நினைவாகவே இருந்தாள்...
ஹாலில் அவள் பாட்டியோடு படுத்திருந்தாள்...
தீடிரென்று பலத்த குரல் அய்யோ அம்மா என கத்தினார் ஏழைமுத்து..
என்னப்பா ஆச்சி என்று எழுந்து ஓடினாள் சந்தியாவின்பாட்டி மங்கலம்..
அக்கா எப்படியாவது என்னை காப்பத்து என அலறி மங்கலம் பாட்டியின் மடியில் வீழ்ந்தார்ஏழைமுத்து..
உடனே சந்தியா கார் டிரைவருக்கு போண் செய்து வர சொன்னாள்....
அதற்க்குள் ஆம்புலன்ஸ்க்கும் போண் செய்தாள்..
ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது..
சந்தியாவும் பாட்டியும் ஏழைமுத்துவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்…
கார்டியாலஜியில் டாக்டர்கள் பேசிக்கொண்டனர்..
சார் உங்களுக்குஒன்னும் இல்ல..
ரீலாக்ஸ் ப்ளீஸ் என்றனர்...
ஐ.சி.யுவில் அட்மிட் முடிந்தது..
ஏம்மா இவருக்கு சிவியர் எம்.ஐ சில நாட்கள் ஆகும் இவர் இயல்பான நிலையில் சுவாசிக்க..
நீங்க கூட இருந்து கவனிக்கவேண்டும் என்றார் டாக்டர்..
சரிங்க டாக்டர் என்றாள் சந்தியா
சந்தியா ஐஸ்வர்யாவுக்கும் அவள் அண்ணன் ஆனந்த்துக்கும் போண் செய்து வரவழித்தாள்...
அனைவரும் மருத்துவமனைக்கு வர சில நாட்கள் ஆனது..
அது வரை சந்தியா பாட்டியை வீட்டில் விட்டு விட்டு ஏழைமுத்துக்கு பணிவிடைசெய்தாள்..
இரண்டு நாள் கழித்து ஏழைமுத்துக்கு நினைவு வர சந்தியாவின் பணிவிடையை பார்த்து கண்கலங்கினார்..
அம்மா சந்தியா நீயும் என் பொண்ணுதாம்மா என்றார்..
ஆம் மரணத்தின் வாசல் புது உறவை தந்தது..
சந்தியா வீட்டுக்கு புறப்பட்டாள்..
தீடிரென்று அவள்மீதுஒரு ஆணின் கை பட்டது பயந்தாள்...
அரவிந்த் நீங்க எப்படி இங்க..
எங்க அப்பாவ இங்கதான் அட்மிட் செஞ்சிருக்கோம்..
நீங்க என்றான் அரவிந்த்...
சந்தியா நடந்ததை சொன்னாள்..
சாரி……. அரவிந்த் என்னாலதான் இவ்வளவும் என்றாள்..
எங்க அப்பா செஞ்சதும் தப்புதான் சந்தியா…. சாரி……… என்றான்..
என்னை…. எவ்வளவோ பெரிய விஷயத்தில இருந்து காப்பாதிட்டீங்க அரவிந்த் தேங்க்ஸ் என்றாள்..
ஒ.கே சந்தியா வா மாமாவை பார்க்கலாம் என்று ஏழைமுத்துவை பார்க்க சென்றார்கள்..
வாங்க அரவிந்த் அன்று நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்டுகிறேன் என்றார் ஏழைமுத்து சற்று மூச்சு திணறலாக..
ஒ.கே மாமா என்றான்அரவிந்த்..
உடனே இருவரும்கிளம்பினார்கள் ..
சந்தியாவும் அரவிந்த்தும் மிகவும் நெருங்கிபழகினார்கள் ..
இருவர் மனதிலும் காதல் துளிர்த்தது..
மருத்துவமனை காதல்மனையாக மாறியது..
இது மெல்ல  கோபால் சாமிக்கு இந்த விஷயம் தெரிய வர இதற்க்கு பலமான எதிர்பபு..
அன்று
சந்தியா நீ ஒன்னும் பயப்படாத நான் இருக்கேன் என்றான் அரவிந்த்..
நான் வேலைக்காரி,வசதி இல்லாதவள் ..
உங்க அப்பாவ கொலை வேற..
என்றாள் சந்தியா...
சந்தியா யாருமே இந்த உலதக்தில பிறக்கும் போது அந்தஸ்த்தோட பிறக்கல,உனக்கும் பெரிய அந்தஸ்த்து உருவாகும்………. நீ படிப்ப வேற முடிக்க போற..
ப்ளீஸ் அடுத்தது எம்.சி.ஏ படி...
இல்ல எம்.எஸ் படி..
நாம கல்யாணம் செஞ்சிப்போம் ப்ளீஸ் என்றான்....
சரி அரவிந்த்உங்கஅப்பாவ நினைச்சா பயமா இருக்குடா..
சரி விடு..எனக்கு ஒரு ஹெல்ப் பன்னு சந்தியா..
என்ன என்றாள்.
உன்னுடைய சர்டிபிகேட்,பாஸ்போர்ட் கொடு என்று கேட்டு வாங்கி கொண்டான்..
அதற்க்குள் ஏழைமுத்துக்கு இந்த விஷயம் தெரிய வர சந்தியா அரவிந்த் இருவரையும் அழைத்தார்..
சந்தியா என் பொண்ணுப்பா கல்யாணம் செஞ்சிக்கோ….
உனக்கு சொத்து வேணுமா……. என்ன வேணும் கேளு என்றார்..
சந்தியா அழுதாள் உங்க அன்பே போதும்..
என்னால உங்க குடும்பத்தில பிரச்சினை வேணாம்..
எனக்கு அரவிந்தே போதும் என கட்டி அனைத்தாள்..
அரவிந்த் அதிர்ந்தான் முழுகாதலை உணர்ந்தான்...
உங்க சம்மதம்தான் வேணும் என்றான் அரவிந்த்...
சரிப்பா உன் இஷ்டப்படி செய் என்றார்..
நாளைக்கு நான் வீட்டுக்கு போய்விடுவேன்..
அப்பா எப்படி இருக்காரு..
எதிரி யாரு என்றார்..
அரவிந்த் சந்தியாவை பார்த்து சிரித்தான்...
அதற்க்குள் கோபால் சாமி சற்று உடல் நலம் தேறிய உடன்  அந்த காதலை பிரிப்பதற்க்கு தயார் ஆனார்..
கலிபோர்னியா யுனிவர்சிட்டியில எம்.எஸ்படிக்க அரவிந்த் ஏற்பாடு செய்தான்..
சீட்டும் சந்தியாவுக்கு கிடைத்தது...
இதை சொல்ல  ஏழைமுத்துவின் வீட்டுக்கு சந்தியாவை பார்க்க சென்றான் அரவிந்த்...
அனைவரும் சாரி அரவிந்த்…………
என கல்யாண பிரச்சனைக்கு ஆறுதல் கூறினார்கள்..
இவன் மனமோ சந்தியாவை தேடியது..
இன்னும் கல்லூரி சில நாட்களில் முடியபோவதை சொன்னாள் சந்தியா..
சரி போங்க அவகிட்ட போய் பேசுங்க அரவிந்த் என்றார் ஏழைமுத்து..
அறைக்கு சென்றான் அரவிந்த்..
சந்தியா ஐ லவ்யு என்றான் அரவிந்த்..
இருவரும் கட்டிபிடித்து அழுதனர்..
உடனே ஏழைமுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து சந்தியாவை அனுப்பிவைத்தனர்...
ஏர்போர்ட்டில் சந்தியா கண்கலங்கினாள்……… ஐ லவ் யு டா………… இந்த வேலைக்காரிக்கு ...
சந்தியா ப்ளீஸ் என்றான் அரவிந்த்..
நீ என்பொண்ணாட்டி……………. என கத்தினான்..
ஏர்போர்ட்டே பார்த்தது…………….
இருவரும் கட்டிபிடித்து அன்பை பறிமாறிக்கொண்டு சந்தியா கிளம்பினாள்...
அதற்க்குள் கோபால்சாமி சந்தியாவை கொலை செய்ய ஆள் அனுப்பினார்..
ஏழைமுத்து வீட்டுக்கு வந்த அடியாட்கள் சந்தியாவை கேட்டனர்..
அவள் சொந்த ஊருக்கு போய் இருப்பதாக பொய் சொன்னார்கள் ..
அந்த கும்பல் சொந்த ஊரைநோக்கி ஓடியது..
உடனே தன் விருப்பத்தை ஏழைமுத்துவிடம் சொன்னான் அரவிந்த்..
சரி விடுப்பா இந்த கேஸ்ஸ நான் முடிக்கிறேன் ..
தனக்கு தெரிந்த ஒருவனை கூப்பிட்டு டேய் நீ போய் அஜராகு போ என்றார்...
அவனும் கொலை செய்ய நான்தான் முயற்ச்சி செஞ்சேன் என அப்ரூவராக மாறினான்..
கோபால்சாமியை சந்தித்தார் ஏழைமுத்து யோவ்...
நீ செஞ்ச கூத்து எல்லாம் எனக்கு தெரியும் வெளியில சொன்னா வேட்க கேடு ..
சந்தியாவ தொந்தரவு செஞ்ச அப்புறம் நடக்கபோவதே வேற என்றார்...
உனக்கு இன்னும் ஒரு பொண்ணு,ஒருபையன் இருக்கான் அவங்கள பாரு என்றார்..
கோபால் சாமிக்கு வியர்த்து கொட்டியது..
போணை கையில் எடுத்து டேய் எங்கடா இருக்கீங்க என அடி ஆட்களிடம் பாதி குரலில் கேட்டார்..
ஐயா சந்தியாவோட பழைய கிராமத்துக்கு போறோம்..
அவள தூக்கினுவந்துரோம்...
என்றனர்...
எதுமே வேணாம்… வாங்கடா நீங்க… என்றார் கோபால் சாமி...
சரிங்க என்றனர் எதிர் முனையில் ..
சந்தியா யுனிவர்சிட்டி கேம்பஸில் தங்கியிருந்தாள்...
நான்கு நாட்கள் சென்றது...
அன்று வகுப்பிற்க்குள் நுழைந்தாள்..
அரவிந்த் வகுப்பறைக்கு உள்ளே நுழைந்த அந்த ஆச்சிர்யம் ..
சந்தியாவால் நம்ப முடியவில்லை..
இவள் கண்கலங்கினாள் அரவிந்த் கண்டுகொள்ளவேயில்லை..
ஐ அம் புரபோசர் அரவிந்த் ..
நான் இங்க சில வருஷமா வேலை பாக்கிறேன்..
உங்களுக்கு நான் நண்பனா இருப்பேன்..
உங்ககிட்ட நிறைய கற்றுகொள்வேன்...
உங்களுக்கு எல்லா ஹெல்ப்பையும் செய்வேன்..
நீங்க இங்க  படிச்சிட்டு உங்க தாய்நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ் என்றான் ஆங்கில உரையில்..
பலத்த கை தட்டல் வகுப்பு முழுவதும்..
சந்தியாவால் தாங்கி கொள்ளவே முடியவில்லை..
ஓடி சென்று அரவிந்தை கட்டி அணைத்தாள்..
அரவிந்த் ஏய் ... ஏய்.. என்றான்..
ஐலவ்யூடா என்றாள் சந்தியா..
வகுப்பில் அமைதி....
அரவிந்த் சொன்னான் ஷீ ஸ் மை ஒய்ப்
என்றான் ...பலத்த கை தட்டல் மீண்டும்...
அன்று மாலை
அரவிந்த் ஏன்டா இதை எங்கிட்ட சொல்லவே இல்லை..
இல்ல சந்தியா அங்க கேஸ் முடியலஅதான்..
இப்ப முடிச்சுட்டேன் நீயும் சேவ்ப்
நானும்...
வாழ்க்கையில இனிமே நாம பிரியக்கூடாது சந்தியா என்றான்..
சரி எப்ப நம்ம கல்யாணம்..
இப்பவே..
சர்ச்க்கு போய் இருவர் திருமணம் முடிந்தது..
பார்ட்டி கொடுத்து விட்டு வீட்டுக்கு போனார்கள்..
சந்தியா என்றான் அரவிந்த்..
என்ன என்றாள்..
ஐலவ்யூ டி என்றான் ..
மெல்ல சந்தியாவின் ஆடையை விலக்கினான்  அரவிந்த்…….
அவன் பெயர் அச்சு பொறிக்கப்பட்டதை(பச்சை குத்தியிருந்தது) கண்டான்..

உடனே அரவிந்த் என்மூச்சு…
என் இதயம்……… என் உடல் எடுத்துக்கோ சந்தியா என்றான்..

டேய் ....வேணாம் நீயே வச்சுக்கோ,உனக்கு தான் கவிதையே வராது..

வேண்டும்னா ஒரு கிஸ் என்றான்..
இப்ப வேணாம்...

டேய்... டேய்...

சரி..சரி ..சொல்லு...

அது வந்துடா நான் அமெரிக்கா வந்தேன் உன் நாபகமாகவே இருந்தேன்..
அதான்டா..

ஐ லவ்யூ சந்தியா .

உண்மையான காதல் வாழும் சந்தியா.

டேய் அரவிந்த் நீ இல்லனா எனக்கு ஏதுடா இந்த வாழ்வு..
ஐலவ்யு அரவிந்த்..

காதல் பறிமாற்றம் பரிணாமம் நோக்கிய விழிகளோடு நகர்ந்தது..
இனிமையாக காலையும் விடிந்தது…

உனக்காக தான் என் வாழ்க்கையை இனிமே அரவிந்த்....
இந்த வாழ்க்கையே உன் கூடத்தான்டா என்றாள்..
சரி…… சந்தியா ஐவல்யூ……
இனிமே எனக்கு நீதான் எல்லாமே சந்தியா …
இருவரும் கட்டிஅணைத்தார்கள்..
காதல் பறிமாற்றம்....

அவர்கள் இருவரும் அமெரிக்ககுடியுரிமை பெற்று இன்பமான உண்மையான காதலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...........

முற்றும்

எழுதியவர் : shivsakthi (13-Jun-17, 6:49 pm)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 606

மேலே