உண்மைக்கான தேடல்

இரவு நேரம் ஒரு பசுவின் கன்றானது கட்டவிழ்த்துக் கொண்டு அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. நான்
அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தேன்..
என்னைக் கண்டதும் கன்றுக்குட்டியிடம் ஒரு மாற்றம்...
மதம் பிடித்தாற்போல் குதித்து என்னை முட்டித் தள்ளுவது போல் ஓடி வந்தது...
சற்று திகைத்து நின்றேன்...
அகத்துள் ஒரு விதமான உணர்வு தோன்றியது...
அது பயமா? அல்லது ஆத்மாவின் விழிப்பா? என்பதை நானறியேன்...

சற்று கம்பீரமான குரல், " திரும்பி போ. ", என்று கன்றுக்குட்டியை நோக்கிக் கட்டளையாக இட்டேன்...
உடனே கன்றுக்குட்டி திரும்பி ஓடியது...
நான் அவ்வழியைக் கடந்து வந்துவிட்டேன்...

அந்தக்கன்றுக்குட்டியும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லை...
உண்மையாக அதை பார்ப்பதே இது தான் முதல் தடவை...
அவ்வாறிருக்க, எவ்வாறு எனது கட்டளையை ஏற்றது?...

அதே போல் முன்னொரு முறை ஒரு நாய் என்னை நோக்கி ஆவேசமாகக் கடிக்க வந்தது. அப்போதும் இதே போல் , " திரும்பிப் போ ", என்றே அதற்கும் கட்டளையிட்டேன்...
அதைக் கேட்டு அந்த நாய் அமைதியாய் திரும்பிச் சென்று படுத்துக் கொண்டது...
அந்த நாயும் பழக்கமில்லா நாய் தான்...
ஆனால், எவ்வாறு இது நிகழ்ந்தது? என்பது எனக்குத் தெரியாது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jun-17, 2:44 am)
பார்வை : 769

மேலே