பசுமை

அடடா அடடா அட அடடா

காற்றிலே கமழ்வது மல்லிகையே
ஊற்றிலே பிறப்பது தமிழ் மொழியே
வெண்பனி மூட்டத்தை தந்தது வான் முகிலே
அள்ளி அணைப்பது தாய் மொழியே


கற்பனையில் இருப்பவளே
கவி சொல்லா என் மகளே
கன்னித் தமிழை படிப்பவளே
காவிரித் தாயின் உருவானவளே
கருவே தமிழே
மொழியே நீயே


தலைக்கு மேலே நீல வானம்
காலில் பச்சை புல் படுக்கை
காற்றிலே மரம் அசைய
பனித்துளி என்னை வருடி,நகரும் காலம் ...
வாழ்க்கை இந்த வாழ்க்கை
இயற்கைத் தமிழ் தாயின் கொடை...
இயற்கை தாயே உமக்கு நன்றி ...


எற்றைக்கும் புதிதாய்
பிறக்கிறேன் .....
தமிழை சுவாசிக்கிறேன் .....
இயற்கையை நேசிக்கிறேன் ....
எனக்கு எதிரியும் இல்லை , துரோகியும் இல்லை ... காரணம் என் உலகம் மொட்டுகளோடு மழலைகள் வாழும் பச்சை போர்வை போர்த்திய வனம்
காரணம் கண்கள் விரிய காண்கிறேன் இயற்கையை .... எனக்கு பிடித்தது அதுவே ....




உனக்கு நீயே நண்பனும் , எதிரியும் ...
ஆதலால் நன்மையே செய் ...
இயற்கை தாய் உனக்கு போலே எல்லோருக்கும் வேண்டும் ...

பச்சை விரிப்பு விரியட்டும்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Jun-17, 7:46 am)
Tanglish : pasumai
பார்வை : 547

மேலே