பி-பாசிட்டிவ்

ஆனந்தத்தில் கூத்தாடினான். புல்லரித்து போனான். தன்னையே கிள்ளிப் பார்த்து கொண்டான்.
“என்னடா, குதித்து கூத்தாடுகிறாய் ” நண்பன் மகேஷ் கேட்டான்.
”டேய், என்னோட பிளட் குருப் பி-பாசிட்டிவ்-டா” நீதானே, அப்ப்ப்ப என்கிட்ட பி- பாசிட்டிவ்-ன்னு சொல்வே.ஆதான் டாக்டரிடம் போய் என் பிளட் என்ன குருப்புன்னு தெரிஞ்சிகிட்டேன். இப்போ பாத்தியா, என் பிளட் குருப்பே பாசிட்டிவ்வா இருக்கு” என்றான்.
அடேய் புருசோத்தமா, பிளட் பாசிட்டீவ்வா இருந்தா போறாது. நம்ம செய்யற செயல்களும் நினைக்கிற எண்ணங்களும் பாசீட்டீவ்வா இருக்கணும்டா“
இதுவரைக்கு நீ செய்த காரியங்களை சொல்லு…அது பாசிடீவ்வா இல்லையா ன்னு நான் சொல்றேன் என்றான்.
இருடா சொல்றேன், போன வாரம் “ரோட்டுல ஒரு ஆளு அடிபட்டு துடிச்சுக்கிட்டு கிடந்தாரு, பார்க்க மனசு கஷ்டமாத்தான் இருந்துச்சு…ஆனா, போலிஸ் கேஸ் நம்மளை பாதிக்குமேன்னு…கண்டுங்காணாம வந்துட்டேன்” என்றான்.
இரண்டு நாளைக்கு முன்னாடி கூட “ரெண்டு பேர் சண்டை போட்டுகிட்டாங்க, நான் பக்கத்துல நின்னு, விடாதே, அடிடா, வெட்டுறா” அப்படின்னு சத்தம் போட்டு அவங்களை குஷிப்படுத்தி நல்லா ஏத்தி விட்டேன்.. ஏன்னா சண்டைப் போடற அளவுக்கு எனக்கு ஒடம்பு இல்லே, ஆதனால சண்டை போடறதைப் பார்த்து சந்தோஷப்பட்டுகிட்டேன்
“புருஷனும் பொஞ்சாதியும் அவங்க வீட்டுக்குள்ளாற சத்தமா சண்டை போட்டுகிட்டிருந்தாங்க, ஒரே இரைச்சலா இருக்குன்னு நம்ம ஏரியா போலிஸ் ஸ்டேஷன்ல நியுசென்ஸ் கேஸ் போட்டு அவங்களை லாக்கப்புல ஒரு நாள் முழுசா ஒக்கார வைச்சேன், அப்பத்தான் திருந்துவாங்கன்னு அப்படி செஞ்சேன்“ பெருமையாக பீற்றிக் கொண்டான்.
“ம்ம்…..அப்புறம் சொல்லு…. நம்ம ஏரியாவுல குடிசைகள் தீப்பற்றி எரிஞ்சப்ப……. எங்க என் மேல தீக்காயம் பட்டுவிடுமோன்னு பயந்து வேகமா வந்துட்டேன்“ என்றான்.
“ஏன்டா புருசோத்தமா, ஒனக்கே இது நியாமா தெரியுதா ?
ஒண்ணாவது உருப்படியா பாசிட்டீவ்வா இருக்கா? எல்லாம் ஒன்னோட சுயநல மனப்பான்மைதான் தெரியுது..
பிளட் மட்டும் பி-பாசிட்டீவ்வா இருந்தா பத்தாது, நம்ம செய்கையும் பாசீட்டீவ்வா இருக்கணும்.
நீ சொன்ன இடத்துல எல்லாம் நானும் இருந்தேன்,ஆனா நீ என்னைப் பார்க்கல……. நானோ அவங்களுக்கு தேவையான என்னால ஆன உதவிகள் செய்து அவங்களை காப்பாத்தினேன். என்னோட பிளட் குருப் என்ன தெரியுமா ? பி-நெகட்டீவ்டா, ஆனா, நான் செய்யறதெல்லாம் பாசீட்டீவ்வா இருக்கும், ஆனா, ஒன்னோட பிளட் குருப்போ பி-பாசிட்டீவ்டா… ஆனா….? ஒனக்கே தெரியுமுல்லே உன்னைப் பத்தி“ என்றான்.
பி- பாசிட்டீவ்-வாக்கான அர்த்தம் என்னவென்று. புருசோத்தமனுக்கு அப்போதுதான் புரிந்தது…

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (15-Jun-17, 10:02 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 325

மேலே