இப்படியும் சில உறவுகள்

இப்படியும் சில உறவுகள்!
தேவை என்றால், தேடிவந்து தேனாய் உருகும்!
வேஷம் போட்டு, வேடிக்கை காட்டும்,
அப்படி, இப்படி என்று ஆயிரம் காரணம்,
அடுக்கும் வானத்தை முட்டும் அளவு,
தேவையில்லை என்றால், பார்க்கும்,
புதிதாய், அன்றுதான் பார்ப்பது போல்!
இப்படியும் சில உறவுகள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (16-Jun-17, 11:34 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 190

மேலே