பிக்ஷனா னு ஒரு பேரா பாட்டி - பேத்தி குமுதா உரையாடல்

பாட்டி : என்டீமா குமுதா ஒன் பொண்ணுக்கு என்ன பெயர்
வைப்பதா தீர்மானம் பண்ணியிருக்க ; இப்பெல்லாம்
வீட்டு பெரியவாளை கேட்டு பெயர் வைப்பதெல்லாம்
அவுட் ஆப் பாஷுன் ஆச்சா ............ அதன் கேக்கறேன்
குமுதா : பாட்டி , நானும் அவரும் சேர்ந்து அவளுக்கு
பிக்ஷனா னு பேர் வெக்க போறதா இருக்கோம் ...............

பாட்டி : அது என்னடி அப்படி ஒரு பேரு..................

குமுதா : பாட்டி அவ நாங்க வேண்டி வேண்டி இத்தன
வருஷம் கழிச்சி பொறந்ததாலே கடவுள் போட்ட
பிச்சை ......... அதனாலே பிக்ஷனா னு வெக்கலாமுன்னு
தமிழ் ல பிச்சை......... சமஸ்க்ரிதத்துல பிக்ஷனா ............

பாட்டி : அடியே எங்கம்மா பேரு பிச்சம்மா ........தெரியுமா
உனக்கு..............அது என்னடி பிச்சை சமஸ்க்ரிதம்
காட்டி குறைஞ்சுபோச்சு............ நீ அவளுக்கு
பிச்சம்மா னு வெச்ச குறைஞ்சா போய்டுவ............
நீ வெக்கப்போற பேரு ஆங்கிலத்துல பெக்கர்......
இப்போ ஆங்கிலம் தான் பாஷுன் னு பெக்கர் னு கூட
வெக்கலாமோ.............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எனக்கு என்னமோ இதெல்லாம் மனசுக்கு சரி படல

குமுதா : சரி பாட்டி, அவர் வந்துட்டார் போல இருக்கு
பாத்துட்டு வரேன் பாட்டி........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jun-17, 1:49 pm)
பார்வை : 175

மேலே