காணவில்லை - அவனை

அவன்...
சிறுவயதில் சிறந்தவனாய்..
பளிச்சிட்டது பல்துறைகள்!

பாடத்தில் பெரியவனாகி
பெயரேதும் பெற்றதில்லை!
அனால், ஆற்றலுடன் நாடகத்தில்..
கரவோசை பெற்றதுண்டு!
வண்ணங்கள் வைத்து பல..
ஓவியங்கள் தீட்டி வந்தான்!
மனதோடு தழுவிடும் நல்..
இசையோடும் பாடிவந்தான்!
குரல் மாறி போனதும் தன்,
விரலாலே இசைத்தெடுத்தான்!
வீரத்தின் வெளிப்பாடாய்..
தற்காப்பும் பழகிக்கொண்டான்!

அனால்,
சிரமமின்றி செய்ததாலோ..
எதிலும் சிரிக்காமல் போய்விட்டான் !?

பள்ளிக்கூடம் மாறியதும்..
கல்வியிலே நாட்டம் கூடி,
புத்தகத்துள் சிறை புகுந்தான்!
முதல் மதிப்பெண் பெற முயன்றே..
இன்று முழுவதுமாய் மாறிவிட்டான்!

தான்..
யார் என்ற நினைவிழந்து,
தனித்துவங்களை ஏதுமின்றி,
" நல்லா படிக்கும் பையன்" என்ற..
பட்டம் மட்டும் வாங்கி வைத்தான்!!

சில நேரம்..
கண்மூடி தூங்கையிலே..
காதில், அழுகுரல்கள் எதிரொலிக்கும்!
யாரென்று எட்டி பார்த்தல்..
தனக்குள் அவன் கொன்று விட்ட பல முகங்கள்!!!!

மெத்தை விற்று தூக்கம் வாங்கும்,
வேடிக்கை தான் இவன் விதியோ!?

எழுதியவர் : நேதாஜி (18-Jun-17, 12:59 am)
சேர்த்தது : நேதாஜி
பார்வை : 464

மேலே