கல்விக்கட்டணம்

தோளில் அணிந்திருந்த புத்தகப்பை கிழிந்திருந்தது...
அதோடு புத்தகப்பையின் மேற்பரப்பில் தூசி படிந்து இருந்தது..
மிகவும் பழைய சட்டை, இழுத்தால் கிழிந்துவிடும் போலிருந்தது...
முகத்தில் அப்பாவித்தனமே நிறைந்திருந்தது...
கடந்து செல்வோர் ஒரு மாதிரி நகைப்பாய் பார்த்துவிட்டுச் செல்ல,
எழுத்துவாசனை அறியாத தாயிடம் கல்லூரிக்கட்டணம் கட்ட பணம் கேட்டான் சிவா...

வலக்கை ஊனமாகிருந்த அவனது தாய் தனது ஒற்றைக்கை உழைப்பில் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயைத் தன் மகனிடம் தந்து பணம் கட்டிவிட்டு வரும்படி சொல்ல,
மீதி பணத்திற்கு என்ன செய்வதென சினந்தான் சிவா...

இப்போதைக்கு இதைக்கட்டிவிட்டு மீதிப்பணத்திற்கு அவகாசம் வாங்கிக் கொள்ளலாமென அம்மா சொல்ல, பணத்தைச் செலுத்திவிட்டு அத்தாட்சி சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, வெள்ளை காகிதமெடுத்து மீதிப்பணம் கட்ட இரண்டு மாத அவகாசம் வேண்டி விண்ணப்பம் ஒன்றை எழுதி கல்லூரி முதல்வரிடம் நீட்ட அவரோ இரண்டு வாரங்களே அவகாசமென்று திருத்தி எழுதிக் கையெழுத்திட்டார்...

இனி இரண்டு வாரங்களுக்குக் கவலையில்லையென்று எண்ணியவனாய் வகுப்பிற்குச் சென்று பாடம் படிக்கலானான் சிவா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Jun-17, 5:21 pm)
பார்வை : 1333

மேலே