பெருமை

அன்னையே!
அம்போருகம் போல்,
அல்லல் என்னை தீண்டமால்,
அமுது அள்ளி கொடுத்து,
அரைவயிறு நீ நனைத்து,
அல்லும் பகலும் வளர்த்தவளே,,
.
அருகில் இருக்கும் வரை,
அருமை தெரியவில்லை,
அறிந்தபின்
அடக்கமுடியவில்லை,
ஏக்கங்கள் எரிமலையாக
சிதறுகின்றன ,
சுடரொளியாக காண்கின்ற போது ,,

உன்
பாதியின் அரவணைப்பில்,
பக்குவம் அடைந்தேன்,
படைப்பின் சுழற்சியை உணர்ந்தேன் ,
இல்லாமையை மறந்தேன்,

இருப்பினும் சில நேரங்களில்,
சிரிக்கின்றேன் வலிகளை மறைத்து,
சிரிக்கவைக்கின்றேன் வலியின் வலிமையறிந்து,
.
எரிமலையை
எள்ளளவு விதையாக்கி,
பரந்து விரிந்த மரம் வளர்த்து,
பறந்து திரியும் பறவைகளுக்கு வீடக்குவேன்,
என்னை சுமந்த உன் பெருமைக்கா மட்டுமில்லை,
என்னையும் சேர்த்து சுமந்தவர்க்காவும்..........

எழுதியவர் : வாசு செ.நா (18-Jun-17, 6:03 pm)
பார்வை : 1377

மேலே