கருவறையில்லா தாய்

தந்தைக்கும் பால்
சுரக்கும் நீ பசியில்
இருந்துப்பார்

தந்தைக்கும்
கருப்பை வலிக்கும்
நீ துன்பத்தில்
இருந்துப்பார்

தந்தைக்கும்
மாதவிடாய்
வந்து வருத்தும்
நீ அவரை
நோகடித்துப்பார்

தந்தைக்கும்
சுகப்பிரசவம்
நடக்கும்
நீ நற்பெயர்
வாங்கிப்பார்...

உன்னையும்
என்னையும்
காக்கும்
கருவறையில்லா
தாய்க்கு
"தந்தைகள்தின நல்வாழ்த்துகள் "...

- கார்த்திகைசெல்வன்

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (18-Jun-17, 10:52 pm)
பார்வை : 109

மேலே