அலுமாரி

போர்த்துகேயர் இலங்கையை 155 வருடங்கள் ஆட்சிசெய்து விட்டுச் சென்ற வார்த்தைகளான அன்னாசி. கடுதாசி ஆசுபத்திரி. அலவாங்கு. கதிரை. குசினி, துவாய் ஆகியவற்றில் அலுமாரி என்ற வார்த்தையும் அடங்கும். இதை “நிலைப்பெட்டகம்” என்பர் தூய தமிழில். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அலுமாரி என்ற வார்த்தை அதிகமாக புழக்கத்தில் உண்டு. காரணம் யாழ்ப்பாணத்தை போர்துகேயர் சுமார் 100 வருடங்கள் ஆண்டு கதோலிக்க மதத்தைப் பரப்பினர். அப்போது யாழ்ப்பாணத்தில் குடி புகுந்த வார்த்தை அலுமாரி

இந்த சிறு கதை யாழ்ப்பாணத்தில் ஒரு குடும்பத்தில் மரபு வழி வந்த அலுமாரி பற்றிய கதை. ருக்குமணியின் தந்தை காராளசிங்கம் ஒரு கறார் பேர்வழி. கோபக்காரர். விஷ்ணு பக்தர். அவரது முதல் தாரத்துக்குப் பிறந்தவள் ருக்குமணி ஒருவளே. அதனால் அவள் மேல் காராளசிங்கத்தாருக்கு பற்று அதிகம். காராளசிங்கம் விஷ்ணு பக்தர் என்ற படியால் மகளுக்கு ருக்குமணி என்று பெயர் வைத்தார். காராளசிங்கத்தின் தந்தை சிவராஜசிங்கம் பர்மாவில் பிசினஸ் செய்து இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன் ஜப்பானியர் பர்மாவை கைபற்றமுன் பணத்தோடு 1925 இல் இலங்கைக்கு வந்தவர். அவர் கப்பலில் கொண்டு வந்த வீட்டுத் தளபாடங்கள் எல்லாம் பர்மா தேக்கினால் ஆனவை. அதில் முக்கியமானது அவர் பாவித்த பல தட்டுகள் கொண்ட பர்மா தேக்கினாள் உருவாக்கப்பட்ட ஆறடி ஆடி உயரம் உள்ள, இரு கதவுகள் கொண்ட அலுமாரி. அந்த அலுமாரியை மரபு வழிச் சொத்து என்று கவனமாகப் பாவிக்கும் படி சிவராஜசிங்கம் தன மகன் காராளசிங்கத்துக்கு மகனின் திருமணத்தின் போது தான் பர்மாவில் இருந்து கொடுவந்த அலுமாரியை கொடுத்தார். எபோதாவது அந்த அலுமாரி கை மாறினால் வீட்டு லட்சுமி போவதுக்குச் சமன் என்று எச்சரித்துக் கொடுத்தார். அந்த அலுமாரி சிவராஜசிங்கம் கட்டிய யாழ்ப்பாண அரசடி வீட்டில் அவரது படுக்கை அறையில் சொகுசாக பர்மாவில் இருந்து வந்து வாசம் செய்யத் தொடங்கியது. அந்த அலுமாரிக்குள் ஒரு இரகசிய இழு பெட்டி உண்டு. அதை திறக்கும் விதத்தை மகனுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தார் சிவராஜசிங்கம். மருமகளுக்கு கூட அதன் ரகசியம் தெரியாது. ஒவ்வொரு புது வருடத்திலும் அலுமாரிக்கு சாம்பிராணி புகை பிடித்து தீபம் காட்டுவது சிவராஜசிங்கத்தின் வழக்கம் அந்த அலுமாரி வீட்டுக்கு வந்த பின்னரே சிவாவுக்கு பர்மாவில் பணம் வந்து குவிய்தொடங்கியது. அவரது பார்ட்னர் திடீர் என்று மாரடைப்பால் இறந்தார். பிஸ்னஸ் முழவதும் அவர்கையுக்குள் வந்தது விலை ஊயர்ந்த ரங்கூன் வைரங்களை அந்த அலுமாரியின் ரகசிய அறைக்குள் வைத்திருந்தார். அதை திறக்கும் சூட்சுமத்தை மகன் காராளசிங்கத்தருக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்தார்.

பிரித்தானியர் ஆட்சியின் போது இலங்கை ரயில்வேயில் போர்மனாக வேலை செய்த காராளசிங்கத்தின் கையுக்கு அலுமாரி மாறியதும் பொறியியலாலனாக பதவி உயர்வு கிடைத்தது. அவரும் மறைந்த தன் தந்தையின் கட்டளைப்படி வருடப்பிறப்பன்று தீபாரனை காட்டத் தவர மாட்டார். அலுமாரிக்குள் தன் பெற்றோரின் பர்மாவில் எடுத்த படத்தை வைத்திருந்தார். காராளசிங்ம் தான் இறப்பதுக்கு முன் மகளை அழைத்து
“ ருக்கு, என்றை அன்பு மகளே , நான் இன்னும் அதிக காலம் இருகப்போவதில்லை. இந்த் வீடும் இந்த அலுமாரியும்’ இனி உனக்கு’ சொந்தம். இது’ ஒரு அதிர்ஷ்டமான அலுமாரி. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த அறையை விட்டு வேறு இடத்துக்கு இதை மாற்றாதே. இது உன் பாட்டனார் எனக்கு இட்ட கட்டளை. இதில் உள்ள ரகசிய அறையைத் திறக்கும் சூட்கிமத்தை இந்த துண்டில் எழுதி அலுமாரி திறப்பையும் என் தந்தை எனக்குத் தந்தவர். இதை உனக்குத் தாறன். பத்திரமாக உனிடம் மட்டும்; இடுக்கட்டும்” என்று சொல்லி மறைந்தார்

ருக்மணியின் திருமணமானபோது மரபு வழி வந்த சொந்த வீட்டோடு அலுமாரியும் அவள் சொத்தாக வந்தது. ருக்மணியும் அலுமாரிக்கு சாம்பிராணி புகை பிடித்து தீபம் காட்டத் தவறவில்லை. அலுமாரிக்குள் தனது சேலைகளையும் குடும்பத்து ஆடைகளையும் அழகாக மடித்து வைப்பால். அதோடு தனக்குப் பிடித்தமான பொருட்கள். உயில் போன்ற பத்திரங்கள் ஆகியவையும் அலுமாரிக்குள் வாசம் செய்யும்

ருக்மணிக்கு மூத்தவள் ஈஸ்வரி அடுத்தவன் கமலன், கடைக்குட்டி இந்திரன். படு சுட்டி. ருக்மணிக்கு மறதி அதிகம். சில சமயம் பொருட்களை எங்கு வைத்தது என்பது அவள் நினைவுக்கு வராது. அந்த சமயம் அவளுக்குத் துணை போவது இந்திரன். அவனுக்கு ஞாபகம் சக்தி அதிகம். அதனால் அவனின் உதவியை நாடுவாள்.
ஈஸ்வரிக்கு திருமணமாகிய போது வீடும் அலுமாரியும் அவள் கையுக்கு மாறியது. அதோடு ரகசிய அறையை திறக்கும் சூட்சும் எழுதப்பட்ட துண்டை தன மறைவுக்கு முன் ஈஸ்வரி கொடுக்க ருக்மணி மறந்துவிட்டாள் அனால் அதைப் பற்றி ஈஸ்வரிக்கு சொல்லி இருக்கிறாள். அவள் சொல்வதைக் கேட்டுக்’ கொண்டு இருந்த ஒருவன் ருக்மணியின் கடைசி மகன் இந்திரன் மட்டுமே. கடைசி மகன் என்ற படியால் இந்திரன் தாயோடு நெருக்கம் அதிகம். அவள் எங்கேல்லாம் முக்கியமான பொருட்களை ஒளித்து வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு ஓரளவுக்கு தெரியும். யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் பல குடும்பகளில் பணத்தை வங்கியில் போடுவது கிடையாது. பணத்தையும் நகைகளையும் அடுப்படியில் புதைத்து வைப்பார்கள். ருக்குமணி அதிகமாக பணத்தை தன் தலையனைக்குள்ளும் அடுப்படியில் உள்ள ஒரு’ தயிர் முட்டிக்குள்ளும் ஒளித்து வைப்பது அவர்கள் பழக்கம். பல தடவை இந்திரனே தாய் சொல்லி பணத்தை அடுப்படியில் இருந்து எடுத்து கொடுதிருக்கிறான்.

போர் காரணத்தால் ருக்மணியின் மரணத்தின் பின் ஈஸ்வரி, கமலன், இந்திரன் குடும்பம் வெளி நாட்டுக்குப் புலம் பெயரும் நிலை ஏற்பட்டது. வீட்டையும் அலுமாரியையும் நல்ல விலைக்கு பலர் கேட்டனர். அலுமாரியை விற்கமுன்
ஈஸ்வரி, அலுமாரியில் தாயின் பொருட்களை காலி செய்துவிட்டு ரகசிய இழுப்பறையை காலி செய்ய முடியவில்லை. காரணம் அதை திறக்கும் சூட்சுமம எழுதி துண்டை ருக்மணி அவளுக்கு கொடுக்க மறந்துவிட்டாள். ஈஸ்வரிக்கு என் செய்வது என்று தெரியவில்லை, தம்பி இந்திரனை அழைத்து
“ எடேய் தம்பி இந்திரா. உனக்குத் தான்’ அம்மா ஒளித்து வைக்கும் இடங்கள் தெரியுமே. அவ இந்த ரகசிய இழுப்பறையை திறக்கும் சூட்சுமம் எழுதிய துண்டை எனக்கு தரமறந்த்திட்டா. உனக்கு அவ அதை ஒளித்து வைத்திருக்கும் இடம் தெரியுமா’? என்று ஈஸ்வரி கேட்டாள் ”
“கொஞ்சம் பொறு அக்கா எனக்கு தெரிந்த இடங்களில் தான் அவ ஒளித்து வைப்பது வழக்கம். தேடி கிடைத்தால் துண்டை கொண்டு வந்து தாறன்” இந்திரன் தனது தேடலை சில நிமிடங்கள் ஒரு துப்பறியும் நிபுணர் போல் செயலாற்றினான். அரை மணித்தியாலத்துக்குப் பின் “அக்கா கண்டு பிடித்து விட்டேன்” என்று சிரித்த முகத்தோடு ஈஸ்வரியிடம் வந்து சீராக மடித்திருந்த மஞ்சள் நிறத் துண்டையும் வெள்ளிச் சிமிழையும் நீட்டினான், “எங்கேயடா கண்டு எடுத்தாய்”?
“ அடுப்படியில் ஒரு சின்ன வெள்ளி சிமிலிக்குள் துண்டை வைத்து அம்மா புதைத்து வைத்திருந்தை மறந்திட்டாள். இந்த சிமிழ் விலை உயர்ந்த சிமிழ் என். நான் நினைக்கிறன் எங்கள் பூட்’டன் சிவராஜசிங்கம் பர்மாவில் அலுமாரியோடு வாங்கிய சிமிழ் என் நினைக்கிறன்.”
“ சரியாச் சொன்னாயடா. இனி இதில் எழுதியபடி அலுமாரி திறப்பை’ பாவித்து திறந்து அப்படி என்ன ரகசிய இழு அறைக்கள் இருக்குது என்று பார்ப்போமே. கண்டுபிடித்த நீயே திறவடா” என்றாள் ஈஸ்வரி.

குடும்பத்தில் எல்லோரும் ஆவலுடன் ரகசிய இழு அறைக்குள் என்ன இருக்கிறது என்பதைய் காண ஆவளுடன் பார்த்துக் கொண்டு நின்றனர். அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இழு அறைக்கள் இருந்து கணகளைக் கூசும் பல ரங்கூன் வைரக்கற்கள் அவர்களைப் பார்த்து சிரித்தன.


******

எழுதியவர் : பொன் குலேன்திரன் - கனடா (19-Jun-17, 8:01 am)
பார்வை : 352

மேலே