சேருமணி பாட்டனால் சீர் - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

தந்தைதாய் பேணல் தனயர்க்(கு) இனியவணி;
எந்தைபோல் மாமிமாமன் பேணல்பெண் மக்களணி;
பேரன் பெயர்த்தி பெருமை குடும்பவணி
சேருமணி பாட்டனால் சீர்! 1

நேரிசை வெண்பா

தந்தைதாய் மூப்பின்கண் தாங்கிப் பிடித்தலும்
அந்தகன் வந்திடுமுன் ஆதரவு - தந்தே
இறைவனடி சேர்வதற்கு ஏந்தியே நின்று
மறைத்தல் புதல்வர் கடன்! 2

அந்தகன் – எமன், மறைத்தல் - காத்தல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-17, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 86

மேலே