அன்பின் சமையற்காரன்

ஆரோக்கியமான காய்கறிகளை தாவரங்களிடம் தானம் பெற்று அழகாய் சமைத்து வைத்தேன் நண்பர்களெல்லாம் சுவைத்து உண்ண வேண்டுமென...

ஆனால், என் நண்பர்களெல்லாம் அதைத் தொட்டுக் கூட பார்க்கவில்லை, அவர்களுக்கு பிடித்ததெல்லாம் அசைவமென்பதால்...

ஆரோக்கியத்திற்காக நான் சமைத்ததிலும் தவறில்லை. அவர்கள் அதை உண்ண மறுத்ததிலும் தவறில்லை...

அசைவமே அவர்களுக்கு பிரியம்...
சைவமே எனக்கு பிரியம்...
அசைவம் உண்டாலும்,
சைவம் உண்டாலும் வாய் அசையுமென்பது மறுப்பதற்கில்லை...

அசைவ உணவில் கருணையைக் கொன்று, அன்பை அறவே மறந்து மிருகமாய் உண்கிறோம்...
சைவ உணவில் அன்பும், கருணையும் ஆதாரமாய் விளங்க, மனிதனென்ற நிலையில் உண்கிறோம்...

எந்நிலை அவசியமென்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்...
அன்பே சைவ சித்தாந்தமென எனக்கு அவசியமான நிலையை என் சித்தம் தேர்ந்துவிட்டது...
அதான், கவிதைகளில் கூட அன்பையும், கருணையும் சமைக்கிறது நடைமுறையில் கிடைப்பதைக் கொண்டும், சித்தம் உணர்வதைக் கொண்டும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jun-17, 6:37 pm)
பார்வை : 1896

மேலே