கண்ணுக்குள் இருக்கும் கண்மணியே 555

என்னுயிரே...

உன் மடியில் நான் தலைசாய்த்து
உறங்கிய நேரம்...

நீ தலைகோதி ரசித்தாய்...

உன் கூந்தலை நான்
ரசித்த நேரம்...

என் கைகளில் சிக்கிய சில
கூந்தல் உதிரிகளை சேகரித்தேன்...

என்னைவிட அதிகமாக
சேகரித்து வைத்து இருக்கிறது...

உன் தோட்டத்தில்
இருக்கும் சிட்டுக்குருவி...

உன் கூந்தலில் கூடு கட்டியதால்
அது சொர்க்கமாம்...

உன் கூந்தலை நான் வருடும்போதெல்லாம்
எனக்கும் சொர்க்கமடி...

என் உதடு கடித்து நீ கொடுத்த
உன் கைகுட்டையும்...

உன்னை நான்
இழுத்தணைத்தபோது நொறுங்கிய...

கண்ணாடி வளையல் துண்டுகளும்
சேகரித்து வைத்திருக்கிறேன் நான்...

நம் திருமண நாளன்று உனக்கு நான்
கொடுக்கும் திருமண பரிசாக...

உன் கூந்தலில் வாடிய
மல்லிகை பூ சரத்தை...

தூக்கியெரிய சொல்லி
என்னிடம் கொடுத்தாய்...

மல்லிகை சரத்தை என் தலையணையில்
சேகரித்து வைத்திருக்கிறேனடி...

காய்ந்த பூ சரத்தில் உன் வாசமும்
உன் கூந்தலும் வாசமும்...

இரவு நேரங்களில் உன் மடியில்
உறங்குவதாய் நிம்மதியாக உறங்குகிறேனடி...

அன்பே நீ என்னோடு ஊடல்
கொள்ளும்போதெல்லாம்...

என் தலையணையிடமே
சண்டையிடுகிறேனடி நான்...

என் தாய்க்கு
மருமகளாக நீ வந்து...

தினம் என்னோடு நீ
சண்டையிட வேண்டுமடி கண்ணே...

அந்த நாட்களுக்காக
காத்திருக்கிறேன் என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jun-17, 7:49 pm)
பார்வை : 501

மேலே