அவள் அசையும் அழகுச் சோலை

மலர்கள் தூவும் மழை அவள்
மயக்கும் உடல் அழகு மேடை
மயில் தோகை தரித்த அவள் ஆடை
அசையும் அவள் வண்ணச் சோலை
தென்றல் கலந்த முல்லை உடல் வாடை
மனம் சொக்கும் அவள் வசந்த கால ஓடை
வாய் மொழிந்தாள் பைந்தமிழ் பாஷை
தேனாய் பாய்ந்தது குயில் பாடும் ஓசை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (20-Jun-17, 1:11 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 175

மேலே