தமிழ்

முத்தமிழே திருவே உனக்கே
முதல் வணக்கம்!
எத்தனை காலமாயினும் உனது
ஏற்றத்தைப் பேற்றுவேன்!

மூவேந்தர் கொழுந்தே உனது
மூவாமை விருந்தே!
முதற்சங்கம் முகிழ்ந்தது உனது
முதன்மைக்குச் சான்றாகும்!

குறுமுனிவன் வளர்ப்பே உனது
குன்றா இளமையை
குனிந்தே வணங்குகிறேன் உனது
குறளால் வாழ்த்துகிறேன்!

எழுதியவர் : கவிஞர் பார்வதி முருகன் (20-Jun-17, 1:17 pm)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 278

மேலே