காதல்

நமக்குள் காதல் முளைத்து
வேகமாய் வளர்ந்து வரும் இப்போதும்
நீ மட்டும் எனக்கு
இன்னும் முழுதாய் புரியவில்லையே
புரியாத கருத்து கொண்ட
புத்தக ஏடுகளை புரட்டி புரட்டி
பார்க்கினும் புத்தகம்தான் கசங்குகிறது
அதன் உள்ளடக்கம் புரியாதது போல் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jun-17, 3:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 273

மேலே