மின்சாரம் வந்தும் மறந்துவிடாத உறக்கங்கள்

இப்போது 22 ..........................................
படிக்கும் பள்ளியில் பருவம் தெரியா நிலையில் இரு உறவுகள் . நிச்சயமாக ஆண், பெண் உறவுதான் நம் கதையின் கதாநாயகர்கள் .....................
வீடு அருகருகே என்பதால் பள்ளியிலும் அவர்கள் நண்பர்கள் தான் என்று நினைக்க வேண்டாம்
வீட்டின் ஆட்கள் ஒற்றுமை தான் அதனாலோ என்னவோ இந்த சிரியவர்களில் இல்லை ஒற்றுமை. பள்ளியில் வாங்கிய திட்டுகள் தவறாமல் போய்விடும் அந்த இருவர்களின் வீடுகளுக்கும் ..........
இருவர்களுக்குள்ளும் "" அவ்வளவு ஒற்றுமை "" ...........தீராத பிரிவுகள் பள்ளி மாறியதாலும் வளர்ந்து விட்டதாலும்

12 வருடங்களாக பார்வையும் இல்லை பேச்சும் இல்லை இது ஆனால் கண்டிப்பாக பருவ மாற்றத்தால் மட்டுமே .......எதிர் பாராதவிதமாக ஏதேனும் பார்வை மோதல் என்றால் சிறிய சிரிப்போடு நிறுத்தம் . பெரிதாய் ஒன்றும் இல்லை இருவருக்குள்ளும் ... சிரித்துக்கொண்டது காலம் ..... சரிதான் ஆரம்பம் கதை....... ஏன்னென்றால் ஏதோ ஒரு நாள் பார்வையோடு மட்டும் அல்லாமல் பேச்சுக்கும் முடிச்சுப்போட்டது காலம் --- --- ---

சிறுபிள்ளையின் ரகசியங்கள் , குறும்புகள், என்று அசை போட்டன மறக்காமல் முக நூல் , தொலைபேசியின் பரிமாற்றங்களோடு பிறகென்ன தொடர்ந்து கொண்டன நட்புகள். நட்புகளோடு பார்வைகள் , பார்வைகளோடு பேச்சுகள் ,தொடர்தல்கள் தொடர்தல்கள் தொடர்தல்கள் .....இப்படியே ஆறு
மாதங்கள் ............

ஆறு மாதங்களில் அவ்வளவு மாற்றங்கள் அவர்களுக்குள் பார்வைகள் வெறும் சிரிப்போடுதான் ஆனால் பல மாற்றங்கள் பல கற்பனைகள் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளாமல் ------- பருவத்திற்கு ஏற்ற மாற்றம் தான் அந்த மாற்றம் ஆரோக்கியம் தான் இருவரின் யோகியதால்

இப்போது வாருங்கள் 22 .........................
எப்படியோ வந்தது அருகில் இருக்கும் வீட்டின் திருமணம் சரியாய் அவளின் பரீட்சை நேரத்தில் ... வீட்டில் இருப்பவர்களுக்கு இருமனம் பிள்ளையை பார்ப்பதா திருமணம் போவதா ????
கதாநாயகியின் கதை முடிவதற்குள் கதா நாயகனுக்கும் ஏதோ பணி நியமனம் போலும் சொல்லிக்கொள்ளாமல் இருவருக்கும் ஒரே நிலை ,,,,,,, (சிரிக்காதீர்கள் உண்மையாகத்தான் கதையை கொண்டுசெல்ல வேண்டும் அல்லவா)

இருவரின் நிலையும் இருவீட்டாரும் பகிர்ந்துகொள்ள வீட்டில் இருக்கும் ஒரு கிழவியின் துணையோடு அவர்களை விட்டு சென்றனர் .......சராசரியாக அல்லாமல் மிக சரியாக தூரம் மற்றும் மனம் இருவருக்குள்ளும் அவ்வளவு ஒழுக்கம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது அந்த இரவு .....
மின்சாரம் இருந்தவரை ......தன்னை மறந்து தூக்கினாள் கிழவி குறட்டையோடு ........

சென்றுவிட்டது மின்சாரமும் மற்றும் .........................................
அவன் வீட்டில் விட்டு சென்றதாலோ இல்லை அவன் அருகில் இருப்பதாலோ என்னவோ அவ்வளவு பயம் அவளுக்கு பயம் போக்கிக்கொள்ள கைகள் பற்றினாள் அவள் ----
அவன்: பயப்படாத wait just a minit power வந்துடும்
அவள் : hey இல்ல pa ரொம்ப பயமா இருக்கு
அவன் : சரி சரி நா போய் tarch எடுத்துட்டு வரேன்
அவள் : வேணாம் வேணாம் நீ போய்ட்டா நா தனியா இருக்கணும் ரொம்ப பயமா இருக்கும் ...
அவன் : சரி நீயும் வா வந்து என்கூட சேந்து தேடு ...
அவள் : m ok .............
தேடல்கள் ...... tarch ஓடு மட்டும் தான் .......
ஏதோ கையில் சிக்க அவன் எடுத்து பற்றவைக்க முயலுகிறான் அந்த தீப்பெட்டியை
இரண்டாவது கை அவள் கையில் ......
அவன் : oi ஒரு நிமிசம் கைய எடு
அவள் : ம்ம்ம்ஹும் பயமா இருக்கும்
அவன் : hey கைல தீப்பெட்டி இருக்கு பத்தவைக்கணும் ......
அவள் : hoooo kkkk
என்றவாறே கையை விடுகிறாள் அவன் தோள் பட்டையை பிடித்தவாறே ..........
பற்றவைத்த தீயோடு இருவரின் முகங்களும் அருகருகே
இருவரின் பார்வைகளின் மிக அருகே ........
சரியாய் அணைந்துவிட்டது.......
அவள் : hey இன்னோனு பத்தவை tarch தேடணும்
அவன் : இதுல ஒரு குச்சிதான் இருந்துச்சு
அவள் : எப்போ என்ன பண்றது
அவன் : ஒன்னும் இல்ல power வரவரைக்கும் அப்டியே உட்காந்து இருக்க வேண்டியது தான்
சிறிய நேர இடை வெளியில் சரியாய் சாய்ந்துகொண்டாள் அவன் தோளில் .............
மறுப்பேதும் இல்லாமல் தொடர்துவிட்டது உறக்கம்

விளக்கொளி வந்தது தெரியாமல் உறங்கிவிட்டனர் இருவரும் ........ ஏதோ எனோ அவன் உறக்கம் கலைந்துவிட கண்ணில் தெரியுது மெழுகுவர்த்தி அவளின் கைகளில் ............
மறைவாய் மூடிக்கொண்டான் கையில் தீக்குச்சி நிறைய இருக்கும் தீப்பெட்டியை ..........
களைந்த உறக்கத்தை மறந்து மறுபடியும் உறக்கம் சிரித்தவாறே ................



என் முதல் படைப்பு ,,,,,
முழுதாய் படித்து முடித்தவர்களுக்கு
அன்புடன்,,,, நன்றிகள்
வான்மதி கோபால்

எழுதியவர் : வான்மதி கோபால் (20-Jun-17, 7:02 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 460

மேலே